எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது Jeffersonville, Indiana, USA 61-1001M 1கர்த்தருடைய வீட்டுக்கு வருவதென்பது எப்பொழுதும் ஒரு சிலாக்கியமே. இந்த வீட்டுக்கு வருவதில் என் வாழ்நாளில் ஒரு முறையாவது நான் வருந்தினதில்லை. அது ஒரு... ஆனால் இந்த காலை வேளையானது, நான் வந்திருந்த நேரங்களிலேயே மிகவும் கடினமான நேரம் என்று எண்ணுகிறேன். ஆம், அது உண்மை. எனவே வாழ்க்கையில் காரியங்கள் நிகழ்கின்றன, அதை நாம் சந்தித்தாக வேண்டும் என்று நாம் அறிந்திருக்கிறோம். அது எல்லோருக்குமே வருகின்றது என்பதை நாம் நினைவுகூர வேண்டியவர்களாயிருக்கிறோம். இக்காலை வேளையில் நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், முக்கியமாக நானும், என் சகோதரர்களும் சகோதரியும் எங்கள் தாயார் இரட்சிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதைக் குறித்து தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்று நானறிவேன். 2அவர்கள் வயது சென்றவர்கள், இதை நாங்கள் சில நாட்களாக எதிர் பார்த்திருந்தோம். அவர்கள் பல குழந்தைகளுக்கு தாயாயிருந்தபடியால், தங்கள் உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டார்கள். என் தாயாரின் நாட்களில், தாய்மார்கள் பிரசவிக்கும் போது, அவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு அளிக்கும் வசதிகள் கிடையாது. என் தாயார் காலையில் பிரசவித்து, அன்று பிற்பகலே எழுந்திருந்து துணிகளைத் துவைத்திருப்பார்கள். ஆனால் இக்காலத்திலோ தாய்மார்கள் தங்கள் பிரசவத்திற்குப் பிறகு பல நாட்கள் மருத்துவமனையில் படுத்திருந்து அவர்களுடைய உடல் நலத்திற்காக எல்லா விதமான மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. இந்த தாய்மார்களுக்கு இப்பொழுது இத்தகைய வசதிகள் உள்ளதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 3என் தாயார் இப்பொழுது மரணத்தை மிகவும் நெருங்கிவிட்டார்கள். நான்... (சகோ. பிரன்ஹாம் அழுகிறார் - ஆசி) இன்று காலை சிறிது கடினமாயுள்ளது. இருப்பினும் இங்கு நான் வருவதாக வாக்களித்திருந்தேன். நான்... என் தாயார் இப்பொழுது போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. இதை நான் அடிக்கடி கூறியிருக்கிறேன். தரிசனங்களைக் குறித்து அநேகர் சாட்சிகளாய் உள்ளனர். “என் சொந்த தாயார் மரணத் தருவாயில் படுக்கையில் கிடந்து, என்னை நோக்கி, பில்லி, எனக்கு என்ன நேரிடும்?” என்று கேட்பார்களானால், நான், “தேவன் எனக்குத் தெரியப்படுத்தினாலன்றி, எனக்குத் தெரியாது, என்னால் கூற முடியாது” என்று நான் பதிலளிப்பேன் என்று கூறியிருக்கிறேன். நான் கூறினது அவ்விதமே இப்பொழுது நிறைவேறியுள்ளது. என் தாயார் இவ்வுலகைவிட்டுப் போவார்களானால், அவர் நிச்சயமாக அதை எனக்கு இரகசியமாக வைத்துவிட்டார் என் தகப்பனார் மரிக்கும் முன்பு, அவர் போவதைக் குறித்து நான் தரிசனம் கண்டேன். நான் பாவியாயிருக்கையிலேயே, என் சகோதரன், மூத்தவர், போவதைக் கண்டேன். ஹாவர்ட், உங்களெல்லாரிடம் நான் கூறியிருக்கிறேன், அவர் போவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவர் போவதைக் குறித்த தரிசனம் கண்டேன். ஆனால் தாயாரைக் குறித்தோ அவர் என்னிடம் ஒரு வார்த்தையும் உரைக்கவில்லை. அவர்கள் போவார்களானால், அதைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. இருப்பினும் நாங்கள்... சென்ற ஞாயிற்றுக்கிழமை வரைக்குமே அவர்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள் என்று தனக்கு புரியவில்லை என்பதாக மருத்துவர் கூறினார். அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள், எப்படியாயினும், நான்... 4ஒரு மாதத்துக்கு முன்பு நான் திருமதி. ப்ராய்க்கு செய்தது போல்; நான் எப்பொழுதும் ஜனங்களை பரிசோதித்து, அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர் என்பதை அறிந்துள்ளனரா என்று நான் அறிந்து கொள்ள விரும்புவது, அவர்கள் எவ்விதம் நிற்கின்றனர் என்பதைக் காண. அதைக் குறித்து நாம் நிச்சயமுடையவர்களாய் இருக்க வேண்டும். “அவர்கள் அறிந்திராவிட்டால் பரவாயில்லை” என்று நாம் சொல்லக்கூடாது. அவர்கள் அறிந்துள்ளனர் என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். ஒருநாள் காலையில் என் தாயாருடன் நான் நீண்ட நேரம் பேசினேன். அவர்கள், ''பில்லி, நான் வாழ வேண்டிய காலம் வரைக்கும் வாழ்ந்துவிட்டேன். வேறெதற்காகவும் நான் வாழ வேண்டிய அவசியமில்லை. நான் போக வேண்டும். நான் போய் அப்பாவுடனும் மற்றும் அங்குள்ள மற்ற பிள்ளைகளுடனும் இருப்பது நல்லது. உங்கள் எல்லாரையும் இங்கு நான் அடிக்கடி காண்கிறேன்“ என்றார்கள். 5க்ளுகோஸ் செலுத்தப்படுவதற்காக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நோயாளி ஊர்தியில் (ambulance) ஏற்றினோம். ஏனெனில் அவர்களால் ஒன்றும் சாப்பிட முடியவில்லை. அவர்கள் இரத்தக்குழாய்களின் வழியாக க்ளுகோஸ் செலுத்த வேண்டியதாயிற்று. அவர்களை நோயாளி ஊர்தியில் ஏற்றின் போது, நான் அவர்களிடம், “அம்மா, எல்லாம் சரியாகிவிட்டது” என்றேன். அவர்களோ, “நான் போக ஆவலாயிருக்கிறேன்” என்றார்கள். நான், “அம்மா, நீங்கள் பிள்ளைகளாகிய எங்களுக்கு பத்து கோடி டாலர்கள் பொக்கிஷம் வைத்துப் போனாலும், அல்லது ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரம் வரைக்கும் பரந்துள்ள ஒரு வீட்டை வைத்துப் போனாலும், நீங்கள் இப்பொழுது எங்களுக்கு வைத்துப் போகும் நான் போக ஆயத்தமாயிருக்கிறேன்”, என்னும் சாட்சிக்கு அது ஈடாகாது என்றேன். இது பணத்தால் வாங்க முடியாத பொக்கிஷம். எனவே இந்த ஒரு நிலையில், நான் பிரசங்கித்த காரியங்களை விசுவாசித்து தைரியமாய் நிற்கிறேன். இது என் தாயாருக்கு நன்மை பயத்ததென்றால், மற்றவர்களின் தாயார்களுக்கும் இது நன்மை பயக்கும், நம்மெல்லாருக்கும் நன்மை பயக்கும். “தேவனே, அவர்களை எடுத்துக் கொள்ளாதேயும்” என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர்களுடைய ஆத்துமா இந்த அழிவுள்ள சரீரத்தை விட்ட மாத்திரத்தில், வேறொரு சரீரம் அதற்காக காத்திருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் இங்கு விட்டுப் போய் சில நிமிடங்களுக்குள், மறுபடியும் வாலிப ஸ்திரீயாக மாறியிருப்பார்கள். 6ஒரு குழந்தை பிறக்கும் போது அதை கவனித்திருக்கிறீர்களா? அதன் சிறு தசைகள் முறுக்கிக் கொண்டும் உதைத்துக் கொண்டும் இருக்கின்றன. அது இப்பூமிக்கு வரும்போது, ஒரு ஆவியைப் பெற்று, அதன் பிறகு ஜீவாத்துமாவாகின்றது. ஆத்துமா இந்த சரீரத்தை விட்டு திரும்பிப் போகும் மாத்திரத்தில் வேறொரு சரீரம் அதற்காக காத்திருக்கிறது. பாருங்கள்? ஏனெனில், முதலில் தேவன் ஆவியையும் ஆத்துமாவையும் உண்டாக்குகிறார், அது சரீரங்களுக்குள் செல்கிறது. நாம் இங்கிருந்து போகும் போது, நமது வாசஸ்தலங்களை மட்டும் மாற்றிக் கொண்டு வேறொன்றிற்குள் செல்கிறோம். ''பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக ஒன்று ஏற்கனவே காத்திருக்கிறது“. எனவே, அதுவே நம்முடைய ஆறுதல். 7இப்பொழுது நாம் ஜெபிப்போம். எங்கள் மகிமையுள்ள பரலோகப் பிதாவே, நீர் இல்லாமல் போனால், இந்த மிக அதிகமான தேவையின் நேரங்களில் எங்களால் என்ன செய்ய முடியும்? எங்கள் நம்பிக்கை இயேசுவின் இரத்தத்தின் மேலும் நீதியின் மேலும் கட்டப்பட்டுள்ளதேயன்றி வேறொன்றின் மேலும் அல்ல. நதிக்கு அப்பால் ஒரு தேசம் உள்ளதென்று அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வுலகில் எங்களுடன் நீர் முடித்துக் கொண்ட பின்பு, எங்கள் வாசஸ்தலங்களை மட்டுமே நாங்கள் மாற்றிக் கொண்டு அப்பாலுள்ள அந்த மகிமையுள்ள தேசத்துக்குச் செல்கிறோம். அங்கு வியாதியோ, மனவேதனையோ, மரணமோ, பிரிவினையோ எதுவும் இருக்காது. நாங்கள் எப்பொழுதும் உம்முடனும் எங்கள் அன்பார்ந்தவர்களுடனும் இருப்போம். எனவே இன்று எங்கள் இருதயத்திலுள்ள இந்த மகிமையான நம்பிக்கைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, இன்று காலையில் இங்கு வருவது எனக்குக் கடினமாகத் தோன்றினது; உமக்கு ஊழியத்தை செய்வது எனக்கு கடினமல்ல, ஆனால் நான் துயரம் கொண்டவனாய், என் இருதயத்தில் நீர் வைத்துள்ள இந்த செய்தியை இன்று காலையில் சபையில் எவ்விதம் அணுகுவேன் என்று வியந்தேன். சத்துரு என்னை அதனுடன் எவ்வளவாக சுற்றி, சுற்றிக் கொண்டு சென்றான்! ஆனால் நான் உமது நாமத்தினால் இவ்வளவு தூரம், பிரசங்க பீடம் வரைக்கும் வந்துவிட்டேன். என்னை இந்த செய்தியுடனும் மற்றெல்லாவற்றுடனும் உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். இதை ஒவ்வொரு இருதயத்துக்கு கொண்டு செல்லவும் எங்களுக்குத் தேவையானதை நீர் அருளவும் மிகுந்த வல்லவராயிருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறோம். இவையனைத்தையும் எங்களையும், உமது ஊழியத்திற்கென்று இப்பொழுது சமர்ப்பிக்கிறோம். என் உதடுகளை உமது வாய் பேசுகின்ற கருவியாகவும் (mouthpiece) என் செவிகளை நீர் பேசுவதைக் கேட்கும் கம்பமாகவும் (hearing post) சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, எங்களை ஆசீர்வதியும். 8இன்னும் மற்ற தாய்மார்களும், தந்தைமார்களும் உலகம் நிலைநிற்குமானால் வரப்போகும் நாட்களில் தாய் தந்தையாகப் போகிறவர்களும், இப்பொழுதே ஆயத்தம் பண்ணிக் கொண்டு, என்றாகிலும் ஒரு நாள் என் தாயார் அடைந்துள்ள இந்த நேரத்தை அவர்களும் அடைய வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்களாக, தேவனே, அவர்கள் இன்றே தங்கள் ஆயத்தத்தை செய்ய வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஏனெனில் இவ்வுலகில் வேறெதுவும் முக்கியமானதல்ல. பணம் எதுவும் இதை வாங்க முடியாது, எந்த புகழும் நிலைநிற்காது, தேவனைத் தவிர வேறெதுவுமே முக்கியமானதல்ல. பணம் எதுவும் இதை வாங்க முடியாது, எந்த புகழும் நிலைநிற்காது, தேவனைத் தவிர வேறெதுவுமே உதவி செய்ய முடியாது, தேவன் மட்டுமே உதவி செய்ய முடியும். ''நீதிமானுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படுகிறது'', என்று அவர் உரைத்துள்ளார் என்பதை அறிந்தவர்களாய், அவருடைய மாறாத கரத்தை நாங்கள் பிடித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த வாழ்க்கையில் இப்பொழுது எங்களுக்குள்ள இந்த சிறு பாடுகள் மிகச் சிறியதாகத் தோன்றுகின்றன. கவிஞன் கூறினது போல், “நாம் வழியின் முடிவை அடையும் போது, பாதையில் நேர்ந்த கஷ்டங்கள் ஒன்றுமற்றதாக தோன்றும்.” கர்த்தாவே, உன்னத அழைப்பின் இலக்கை நோக்கித் தொடர எங்களுக்குதவி செய்யும்; என்றாகிலும் ஒரு நாள் அப்பாலுள்ள மகத்தான தேசத்தில் நாங்கள் இனிய சூழ்நிலையில் சந்திப்போம் என்பதை அறிந்திருக்கிறோம். எங்கள் வார்த்தைகளை இப்பொழுது ஆசீர்வதியும். எங்கள் ஆராதனையை ஆசீர்வதியும். இங்குள்ள ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையின் இருதயமும் இன்று காலை அனல்மூண்டு அசைக்கப்படுவதாக. பிதாவே, எனக்கும் இது சிறிது தேவை. இவையனைத்தையும் நீர் அருளுமாறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். 9இங்கு உறுமால்கள் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டுள்ளதை இப்பொழுது கவனித்தேன். நான்... இவைகளுக்கு சற்று பின்பு வருவோம். நான் அலாஸ்கா அருகிலுள்ள ஒரு மனிதனுடன் வேட்டை பயணம் மேற்கொண்டு திரும்பி வந்திருக்கிறேன். இந்த காலத்தை, அதாவது ஆண்டின் இலையுதிர் காலத்தை, என்னை மீண்டும் பெலப்படுத்திக் கொள்ளவும், வரப்போகும் காலங்களில் ஊழியத்தை மேற்கொள்ள என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும், நான் ஒதுக்கி வைப்பது வழக்கம் என்று உங்களுக்குத் தெரியும். 10என் நரம்புகளில் நான் மிகுந்த பெலமுள்ளவன் அல்ல என்று நான் சொல்லக் கூடும். எனக்கு மிகுந்த மோசமான நரம்பு அமைப்பு உள்ளது. ஆனால் கர்த்தர் எனக்கு அருளின ஊழியத்தை செய்வதற்கு இந்த விதமான நரம்பு அமைப்பு அவசியம் என்பதை உணருகிறேன். உலகில் உங்களுக்கு எல்லாமே மகிமையாக இருக்க முடியாது. சரீரப் பிரகாரமாக எனக்கு பெலமுள்ள சரீரம் இருப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் என் நரம்பு அமைப்போ; நான் இயற்கைக்கும் இயற்கைக்கு மேம்பட்டதற்கும் இடையேயுள்ள கோட்டின் மேல் விளையாடிக் கொண்டிருப்பதால், அது என்னை சுக்குநூறாக்கிவிடுகிறது. இதை நான் உட்கார்ந்து கொண்டு சபையோருக்கு விளக்க முயன்றதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அது விளங்காது. எனக்கே அது விளங்குவதில்லை. என்னை மருத்துவர்கள் பரிசோதித்து, நரம்புகளுக்கு அழுத்த பரிசோதனை செய்தனர். இப்படிப்பட்ட ஒன்றை அவர்கள் கண்டதில்லை என்று கூறினர், பாருங்கள், அது எப்படி ஓரிடத்திலிருந்து வழிநெடுக்க மற்றொரு இடத்துக்கு செல்லுகிறதென்று. அவர்களுடைய விஞ்ஞான ஆய்வுகள், அவர்கள் என்ன செய்தனரென்று எனக்கு விளங்கவில்லை. அவர்கள் காரியங்களைச் செய்யும் முறைகள். ஆனால் ஒரு நாள் கிறிஸ்து என்னைப் பிடித்துக் கொண்ட போது, எனக்கு ஏதோ சம்பவித்ததென்றும், நான் மாறினவனானேன் என்றும் எனக்குத் தெரியும். 11இதை நான் கூற விரும்புகிறேன், அது ஒருக்கால் என்னைப் பெலப்படுத்தும். இதைக் குறித்து இன்று காலை பேசுவதென்பது மிகவும் விசித்திரமாகத் தோன்றக் கூடும். ஆனால் என் செய்தியில் பிரவேசிப்பதற்கு முன்பு, என்னை ஒருவிதம் அமைதியாக்கிக் கொள்ள, இதைக் கூற விரும்புகிறேன். இங்கு வருவேன் என்று நான் கூறிய போது, தாயார் வியாதிப்படுவார்கள் என்று எனக்குத் தெரியாது. இன்றிரவு ஆராதனைக்கும் நான் வருவதாக ஒப்புக் கொண்டேன். தேவனுக்கு சித்தமானால் நாம் வருவோம். இன்றிரவு இங்கு நான் வந்து, பேசுவேன், போதகருக்கு ஆட்சேபனை இல்லையென்றால், (சகோ. நெவில், “ஆம், ஐயா! நீங்கள் வரலாம்” என்கிறார் - ஆசி). இன்றிரவு நான் தேற்றரவாளன் வந்துவிட்டார் என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். அது இன்றிரவு ஆராதனையில். இன்றிரவு இராப்போஜன ஆராதனையையும் நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றிரவு எல்லோரும் வந்து இந்த இராப் போஜனத்திலும் செய்தியிலும் எங்களுடன் பங்கு கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். 12சென்ற வசந்த காலத்தில் நான் அலாஸ்காவில், இல்லை, அலாஸ்காவின் அருகில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்தேன். ஆராதனைகளுக்காக கர்த்தர் எங்களுக்கு மிகவும் மகத்தான தருணத்தை அருளினார். வெளிப்புறத்துக்கு செல்வது எனக்கு எப்பொழுதும் மிகப் பிரியம் (பின்னால் உள்ளவர்களுக்கு நான் பேசுவது நன்றாக கேட்கிறதா? நன்றாகக் கேட்டால், உங்கள் கைகளையுயர்த்துங்கள். பின்னால் உள்ளவர்கள்). எனக்கு எப்பொழுதுமே வெளிப்புறம் செல்வதென்றால் மிகப் பிரியம். எங்கள் குடும்பத்தை அறிந்துள்ள எவருக்குமே அது தெரியும். இப்பொழுது மரணத்தருவாயிலுள்ள என் தாயாரின் தாயார் ஒரு சிகப்பு இந்தியர். என் மனமாற்றம் அதை மாற்றவேயில்லை. நான்... வெளிப்புறத்திலுள்ள என் பிரியத்தை. அதற்காக நான் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன், ஏனெனில் அங்கு எங்காவது ஓரிடத்தில் நான் தேவனைக் காண்கிறேன். நான் வேட்டைக்குப் போக வேண்டும் என்பதற்காக அங்கு அதிகம் செல்வதில்லை, ஆனால் தேவனுடன் தனித்திருக்க வேண்டும் என்பதற்காக. நான் தனிமையில் வேட்டையாடுகிறேன். 13அங்கு நான் சென்றிருந்த போது, சில சிறந்த வழிகாட்டிகளை சந்தித்தேன். இந்த ஆட்கள் கனடாவிலும் மற்ற இடங்களிலும் உள்ளனர். நீங்கள் காட்டுக்கு போவதற்கு முன்பு வேட்டை கமிஷன் உங்களை ஒரு வழிகாட்டியிடம் ஒப்படைக்கிறது. அந்த வழிகாட்டி உங்களோடு கூடவே இருக்க வேண்டும். ஒரு அருமையான கிறிஸ்தவ சகோதரனை நான் சந்திக்க நேர்ந்தது. அவர் இளைஞர், பெந்தெகொஸ்தேகாரர். அவர் கனடாவில் மிகவும் புகழ்பெற்ற வழிகாட்டி. அவருடைய மனைவி ஒரு மகிமையான இரட்சிக்கப்பட்ட பெண். அவருக்கு ஏறக்குறைய நாற்பது வயதிருக்கும். அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர், பதினெட்டு வயது முதல் சுமார் இருபத்திரண்டு வயது வரைக்கும் உள்ள ஆண் பிள்ளைகள். அவர் வழிகாட்ட வேண்டிய இடமாக, ஆல்கன் சாலையில் ஒரு பரந்த ஐந்நூறு மைல் பிரிவு அளிக்கப்பட்டுள்ளது. 14அங்கு சில சிகப்பு இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து போக மனமில்லாமல், மிகவும் கர்வம் கொண்டவர்களாய், “இங்கு நீங்கள் வந்தீர்களானால், இரத்தம் சிந்துதல் உண்டாகும்”, என்னும் ஒரு அறிவிப்பை தொங்கவிட்டிருந்தனர். இருப்பினும் நாங்கள் சவாரி செய்து அந்த இடத்தைக் கடந்து மறுபடியும் அந்த வழியாய் திரும்பிச் சென்றோம். என்ன இருந்தாலும், இந்த தேசம் நமக்குச் சொந்தமாவதற்கு முன்பு அவர்களுக்கு சொந்தமாயிருந்தது. உங்களுக்குத் தெரியும். சென்ற வசந்த காலத்தின் போது அவர்களிடம் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து எடுத்துரைத்து, அவர்களுடன் நல்ல தருணம் அனுபவித்தோம். ஒரு வயோதிபன், அந்த ஜாதியில் மிகவும் முதியவர். அவருக்கு ஏறக்குறைய நூறு வயது. அவருக்கு தன்னுடைய அவருக்கு ஏன் அங்கிருந்து போகப் பிரியமில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். அவர்கள் தங்கள் மரித்தோரை மரக்கட்டையில் அடக்கம் பண்ணி, அந்த மரக்கட்டையை மரத்தில் தொங்கவிடுகின்றனர். அவருடைய இரண்டு பிள்ளைகள் அங்கு அடக்கம் பண்ணப்பட்டிருந்தனர். அதன் காரணமாக அவருக்கு அங்கிருந்து போகப் பிரியமில்லை. அவருக்குப் போக பிரியமில்லாததன் காரணத்தை நான் புரிந்து கொண்டேன். அவர்களுக்கு இட ஒதுக்கீட்டைச் செய்து கொடுத்த கனடா அரசாங்கம், ''அவர்கள் அங்கிருந்து போகாமல் பிடிவாதம் பிடித்தால், அவர்களைப் பலவந்தமாக அவ்விடத்தை விட்டுக் காலி செய்வோம்'' என்றது. அப்படிச் செய்வது நன்றாயிராது; அவர்களுடைய குழந்தைகள் அங்கு மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றனர். 15எனவே, எப்படியோ, நதிகள் பெருக்கெடுத்து எங்களைத் தடுத்துவிட்டது. நாங்கள் பழுப்பு நிறக் கரடியை வேட்டையாடுவதற்காக செல்ல எத்தனித்திருந்த சமவெளி பிரதேசத்திற்கு எங்களால் செல்ல முடியவில்லை. இந்த திரு. சவுத்விக், சவுத்விக் தான் எங்கள் வழிகாட்டி. அவர்... அப்பொழுது நான் எட்டி பிஸ்கல் என்னும் போதகருடன் இருந்தேன். எனவே அவருடைய பையன்... திரு. சவுத்விக்குக்கு இருபத்தைந்து வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடையே ஒரு இளைய சகோதரன் இருந்தான். அவனுக்கு பயங்கரமான வலிப்பு நோய் (epilepsy) இருந்தது. திரு. சவுத்விக், ஒரு ஆண்டுக்கு முன்பு தான் கிறிஸ்தவரானார். அதற்கு முன் அவர் மாட்டுப் பையனாயிருந்தார். அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கை முரடானது என்று உங்களுக்குத் தெரியும். அவர் அப்பொழுது தான் கிறிஸ்தவரானார், அவருக்கு விசுவாசம் இருந்தது. அவர், ''சகோ. பிரன்ஹாமே, உங்கள் புத்தகத்தை நான் படித்திருக்கிறேன்“ என்றார். அவருடைய சகோதரனுடைய வலிப்பு நோயைக் குறித்து அவர் அடிக்கடி ஜாடையாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவர், ”ஓ, என்னால் என் சகோதரனை உங்களிடம் கொண்டு வர முடிந்தால்!“ என்றார். நல்லது, அது எனக்கு எப்படிப்பட்ட உணர்ச்சியை உண்டாக்கும் என்று உங்களுக்குத் தெரியும், என்னால் ஒன்றுமே செய்ய முடியாத உதவியற்ற நிலை. இதெல்லாம் எப்படி நடந்தது என்று நான் வியந்து கொண்டிருந்தேன். 16கனடாவில் வழக்கமாக மனிதர்கள்... உங்களில் பிரயாணத்தை மேற்கொள்கிறவர்களுக்கு, குதிரைகளைக் கையாளுவதைக் குறித்து தெரியும். எனக்கு குதிரைகள், மிருகங்கள் என்றால் பிரியம். அவர்கள் குதிரையின் வாலில் ஒரு வாரைக் கட்டி விட்டு அவைகளை மொத்தமாக மேயவிடுவார்கள். ஆனால் அங்கு நீங்கள் அவ்விதம் செய்ய முடியாது, ஏனெனில் அது மிருதுவான பாறை. நீங்கள் ஒரு குதிரையை இழந்தால், மொத்தமாக எல்லா குதிரைகளையும் இழக்க நேரிடும். எனவே அவைகளை நாம் போக விட்டு, அவைகளைப் பாதையில் நடத்த வேண்டும். நான் மிகவும் பின்னால் ஒரு இளங்குதிரையின் மேல் ஏறிக்கொண்டு, வழி தவறிச் சென்ற குதிரைகளைப் பாதையில் கொண்டு வர முயன்று கொண்டிருந்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவி தமது கிருபையினால் இறங்கிவந்தார். என் குதிரையை நான் வேகமாக ஓட்டி, மற்ற குதிரைகளைக் காட்டின் வழியாக முன்னால் வழி நடத்திக் கொண்டிருந்த திரு. சவுத்விக்கை அடைந்தேன். நான், “பட்” என்றேன். அவர் “என்ன, சகோ. பிரன்ஹாம்” என்றார். நான், “என் வார்த்தையை ஏற்றுக் கொள்வீர்களா?” என்றேன். அவர், “நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன்” என்றார். நான், “உங்களுக்கு என்னிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது உள்ளது. நீங்கள் போய் ஃபோர்ட் செயின்ட் ஜானிலுள்ள உங்கள் சகோதரனை இங்குள்ள நெடுஞ்சாலைக்கு அழைத்து வாருங்கள்” என்றேன். அது எழுநூறு மைல் தொலைவில் உள்ளது. அவர் ஒரு பழைய குடிலில் வசித்து வந்தார். அவர் அடுப்புக்கு ஒரு பழைய தகர டப்பாவை உபயோகித்தார். அவருக்கு அங்கு குழந்தைகள் இருந்தனர். அவரிடம் நான், ''அவனுக்கு முதன் முறையாக வலிப்பு வரும்போது, அவனுக்குப் பின்னால் 'ஷர்ட்'டைப் பிடித்துக் கொண்டு அவிழ்த்துவிடுங்கள். நீங்கள் செய்வதற்காக ஒன்றை உங்களிடம் கூறுகிறேன். அந்த 'ஷர்ட்'டை நெருப்பில் போட்டு விட்டு, இதை நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறேன் என்று சொல்லுங்கள்“ என்றேன். அவர், “நான் அப்படியே செய்கிறேன்”, என்றார். 17எனவே அவர் சென்று அவருடைய சகோதரனை இங்கு அழைத்து வந்தார். அன்று காலை அவர் ஏதோ காட்டைப் பாதுகாக்கும் ஒரு அதிகாரியுடன் காட்டுப் பாதையில் செல்ல வேண்டியதாயிருந்தது. அவருடைய சகோதரனுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வலிப்புகள் வருவது வழக்கம். அவனுடைய சிறு வயது முதற்கொண்டே இது அவனுக்கு இருந்து வந்திருக்கிறது. அவனுக்கு வலிப்பு வரும்போதெல்லாம், அவனுடைய மனைவிக்கு மிகுந்த பயம் உண்டாகும். ஏனெனில் அவன் அந்நேரத்தில் முரட்டுத்தனமாகிவிடுவான். அவன் மிகவும் பெலமுள்ளவன், இளைஞன். பட் வீட்டை விட்டுச் சென்றபிறகு, அவனுக்கு வலிப்பு வந்தது. அவனுடைய மனைவி பிள்ளைகளை வழியிலிருந்து அகற்றிவிட்டு, வழக்கமாக ஜன்னலின் வழியாக வெளியே குதிப்பதற்கு பதிலாக, இம்முறை நேராக அவன் முதுகின் மேல் பாய்ந்து, அவனுடைய 'ஷர்ட்'டை அவிழ்த்தாள்; பரிசுத்த ஆவியால் நிறைந்த இந்த சிறிய ஸ்திரீ, அவனுடைய 'ஷர்ட்'டை அவிழ்த்து அதை நெருப்பில் எரிந்து, ''இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறேன்'' என்றாள். அன்று முதல் அவனுக்கு வலிப்பு ஒருமுறை கூட வரவில்லை. இது சென்ற வசந்த காலத்தில் நடந்தது. 18அநேக சமயங்களில், இது சிறிது கடினமாய் இருந்து வந்துள்ளது. புரிந்து கொள்ளாத ஜனங்கள், “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் ஏன் வேட்டை பயணம் மேற்கொள்ள வேண்டும்?” என்று கேட்கின்றனர். பாருங்கள், அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்களிடம் இதை விளக்க முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை, பாருங்கள். அங்கு நீங்கள் பிடிக்க முடியாதவர்களைப் பிடிக்கிறீர்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவ்வளவு நாட்கள் கூட ஆகவில்லை நான் காலையில் உறக்கத்தினின்று எழுப்பப்பட்டேன். இதை நான் சபையிலுள்ள பெரும்பாலோருக்கு சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன், எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு சம்பவம் நிறைவேறுவதற்கு முன்பு அதை முன்கூட்டியே நான் அறிவிப்பதை இங்குள்ள உங்களில் அநேகர் கேட்டிருக்கிறீர்கள். நான் கண்ட அந்த தரிசனத்தில், ஒரு பெரிய மிருகத்தைக் கண்டேன். காண்பதற்கு ஒரு மானைப் போலிருந்தது. அதற்கு பெரிய, உயரமான கொம்புகள் இருந்தன. அது... அதை அடைய நான் பக்கவாட்டில் சுற்றிலும் இப்படி மிருதுவான பாறையின் வழியாய் செல்ல வேண்டிதாயிருந்தது. அது மிகவும் புகழ் வாய்ந்த மிருகம். அது சிறந்த வேட்டைப் பொருள் மிருகம். அங்கு கட்டம் போட்ட பச்சை நிற ஷர்ட்டை அணிந்திருந்த ஒரு மனிதனைக் கண்டேன். அந்த மிருகத்தை நான் சுட்டு வீழ்த்தின பிறகு, நான் சாலையின் வழியாக வந்து கொண்டிருந்த போது, ஒரு சத்தம், “அந்த கொம்புகள் நாற்பத்திரண்டு அங்குலம் உயரம் உள்ளன” என்று கூறக் கேட்டேன். அது இவ்வளவு உயரம். அது ஒரு பிரம்மாண்டமான மிருகம். நான் சாலையில் திரும்பி வந்துக் கொண்டிருந்த போது, வெள்ளிமுனை கொண்ட மிகப் பெரிய மூர்க்கமான கரடியைக் கண்டேன். 19இதுவே பிரபலமான கரடி, மூர்க்கமான கரடி இனத்தில் நான்கு வகையுண்டு. ஒன்று வெள்ளி முனை கொண்டது. இது பிரபலமானது. அடுத்தது காதீஷ் என்னும் சுதேசி பேரைக் கொண்டது. அது கறுப்பு, வட்ட வடிவமுள்ள காது. இது இரண்டாம் வகை. மூன்றாம் வகை வழக்கமான மூர்க்கமான கரடி. அது கறுப்புக்கும் பழுப்புக்கும் இடையே ஒரு நிறத்தை கொண்டது. அடுத்ததாக, கோடியாக், அது கோடியாக் தீவிலும் மேற்கு அலாஸ்காவிலும் மட்டுமே காணப்படுகிறது. இது பிரம்மாண்டமானது. இந்த கரடி வகைகள் அனைத்திலும் மிகப் பெரியது. இது சாம்பல் நிறம் கொண்டது. ஆனால் வெள்ளி முனை கரடி கறுப்பு நிறம், வெள்ளை நிறம் முனையில்... வெள்ளி நிறம் மயிரின் முனையில் காணப்படுகின்றது. இது மிகவும் பிரபலமானது. அதிக மூர்க்கமானது. இந்த கரடியை நான் இருதயத்தில் சுட்டுக் கொன்றேன். ஆனால் என் சிறு துப்பாக்கியை வைத்துக் கொண்டு அதை எப்படி சுட்டு வீழ்த்தினேன் என்று என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதை நான் ஏற்கனவே சகோதரரிடம் கூறியிருந்தேன். அது நடப்பதற்கு முன் நான் கூறினதை இங்குள்ள எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். நல்லது, பெரும்பாலோர், பாருங்கள். 20எனவே திரு. ஆர்கன் பிரைட் என்னை அழைத்து, அலாஸ்காவுக்குப் போகும்படி கேட்டுக் கொண்டார். அலாஸ்காவுக்குப் போவதற்கு பதிலாக, அந்தப் பயணத்தை பட்டுன் மேற்கொள்ள எனக்கு ஏவுதல் உண்டானது, ஏனெனில் அவருக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன். அங்கு நான் சென்றபோது, அவருடைய மனைவியுடனும் அங்கு சுற்றிலும் இருந்த ஜனங்களுடனும் தேவன் உரைத்த காரியங்களைக் கூறினேன். நான், ''உங்கள் யாரிடம் கட்டம் போட்ட ஷர்ட் உள்ளது?“ என்று கேட்டேன். யாரிடமும் இல்லை. அப்பொழுது நான், ”நல்லது, இது ஒருக்கால் நான் மேற்கொள்ளும் மற்றொரு பயணத்தில் நிறைவேறக் கூடும். ஆனால் எங்காவது ஓரிடத்தில் கர்த்தர் அதை, அவர் உரைத்தபடியே, எனக்கு தந்தருளுவார்“ என்றேன். 21நல்லது, நாங்கள் பயணம் சென்றோம். முதலாம் நாள் குதிரைகளின் மேலேறி உயர, மரம் வளரும் இடத்திற்கும் உயர, மரம் வளராத பனிக்கட்டி ஆறுகள் நிறைந்த அந்த இடத்திற்கு சென்றோம். இரண்டாம் நாள் நாங்கள் வேட்டைக்குச் சென்றிருந்த போது முக்கால் சுருள்கள் கொண்ட நிறைய ஆடுகளைக் கண்டோம். ஆனால் அது சரியாக இல்லை. பரிசுத்த ஆவியைப் பெற்ற பெந்தெகொஸ்தேயினராகிய நாம் ஒவ்வொருவரும் ஐக்கியத்தைக் குறித்து பேசுகிறோம். அங்கு உயரே எங்களுக்கு சிறிது தருணம் உண்டாயிருந்தது. அந்த நிறங்கள் மாறுவதைக் காண்பதும் அந்த மலைகளும்; அந்த உயரத்தில் தேவன் மாத்திரமே வாழ்கிறார். அது எவ்வளவு மகத்தான தருணம்! நாங்கள் காலை ஒரு மணி வரைக்கும் படுக்கைக்கு செல்லாமல் தேவனைத் துதித்து மகிமையான தருணம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். 22இரண்டாம் நாள் நாங்கள் வெளியே சென்றோம். ஆறு மைல் தூரத்தில் பனிக்கட்டி ஆறுகளுக்குப் பின்னால் சில பெரிய ஆட்டுக்கடாக்கள் எங்கள் கண்களில் பட்டது. நான், “நல்லது நாம் திரும்பிப் போவோம். நாளை காலையில் வெளிச்சம் வந்தவுடன் நாம் சாலையில் பயணம் செல்வோம்” என்றேன். எனவே நாங்கள் அடுத்த நாள் காலையில் வெளிச்சம் வருவதற்கு முன்பே புறப்பட்டுவிட்டோம். ஒன்பது மணிக்கு நாங்கள் உயரே நேற்று கண்ட பனிக்கட்டி ஆறுகளை அடைந்தோம். நாங்கள் மேலே சென்ற பாதையில், நான் என் முதல் காட்டு கலைமானைக் கண்டேன். நான் இதற்கு முன்பு ஒன்றைக் கண்டதில்லை. நான் லாப்லாந்தில் வீட்டு வகை மான்களைக் கண்டிருக்கிறேன், ஆனால் கலைமானைக் கண்டதில்லை. கலைமானின் சுதேசி பெயர் கரிபோ (caribou). அவைகளுக்கு வழக்கமாக பலகை போன்ற கொம்புகள் இப்படி இருக்கும். ஒன்று அவைகளின் மூக்குக்கு முன்னால் இருக்கும், பிறகு ஒரு பலகை முன்னால் தள்ளிக் கொண்டு நிற்கும். பிறகு கொம்புகள் இவ்வளவு அகலமுள்ள மற்றொரு பலகையுடன் கொக்கி போல் மாட்டிக் கொண்டிருக்கும். 'பட்' என்னிடம், “ஒருக்கால்...” என்றார். நான், “இல்லை, இல்லை. அவர்... அது கலைமான் அல்ல, ஏனெனில் அதற்கு இந்த விதமான கொம்புகள் இருக்கவில்லை”, என்றேன். ஆனால் அன்று காலை, மேலே சென்று கொண்டிருந்த போது, நான் பெண் கலைமானையும் அதன் குட்டியையும் கண்டேன். நாங்கள் ஒரு பக்கம் சென்றபோது, ஒரு இளம் ஆண் கலைமான் ஓடுவது என் கண்ணில்பட்டது. 23சகோ. எட்டி இந்தியர்களின் மத்தியில் மிஷனரியாயிருந்து அவர்களை போஷிக்க விரும்புகிறார். அவர் ஒரு அருமையான மனிதன், நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய மனைவி இப்பொழுது தான் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வெளி வந்து விவாகம் செய்திருக்கிறாள். அவர்களுடைய கைகள் இங்கு பூச்சிகளால் கடிக்கப்பட்டு புண்ணாய் உள்ளன. இது அவர்கள் வாழ்ந்த இந்தியர்களின் இடத்தில் நடந்தது. இவர்கள் அங்கு கிறிஸ்துவை இந்தியர்களிடம் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். அதைச் செய்ய கிருபை அவசியம்! இவர்கள் வேர்கடலை வெண்ணையும் (Peanut butter) சர்க்கரை குழம்பையும் (Molasses) புசித்து காலங் கழித்து, அந்த குடிசைகளில் உறங்குகின்றனர். அங்கு மூட்டை பூச்சிகளும் வண்டுகளும் எல்லாமே அவர்களை இப்படி அரிக்கின்றன. இப்பாடுகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவர்களிடம் கொண்டு வரவே. எனவே சகோ. எட்டி நழுவி மலையை சுற்றி சென்றுவிட்டார். நான் இரண்டு மணி நேரமாக பனிக்கட்டியினால் மூடப்பட்ட அந்த மகத்தான மலையின் சிகரங்களை ஆச்சரியத்துடன் நோக்கிக் கொண்டிருந்தேன். நான், “தேவனாகிய கர்த்தாவே, ஆயிரம் வருட அரசாட்சியில் இங்கு நான் வசிக்க அனுமதியும்” என்றேன். மலைச் சரிவிலுள்ள மஞ்சள் நிறப் பூக்களும், சிகப்பு காட்டு புஷ்பங்களும், சிகரங்கள் பனிக்கட்டியினால் மூடப்பட்ட அந்த பெரிய மலைகளின் வெள்ளை நிறத்துடன் அழகாக கலந்து, கீழேயுள்ள ஏரிகளில் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. அதைக் குறித்து ஏதோ ஒன்றுண்டு. அங்கு நீங்கள் உட்கார்ந்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டேயிருக்கலாம். தேவன் மாத்திரமே அந்த வண்ணங்களைத் தீட்ட முடியும். வேறு யாரும் அதைச் செய்ய முடியாது, பாருங்கள். அங்கு நான் உட்கார்ந்து கொண்டு, ''சகோ. எட்டிக்கு என்னவாயிற்று?“ என்று வியந்து கொண்டிருந்தேன். 24நான் பட் இருந்த இடத்தை அடைந்தேன். அவரும் அங்கு உட்கார்ந்து கொண்டு இரண்டு மணி நேரமாக களிகூர்ந்து கொண்டிருந்தார். நாங்கள் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்தோம். அங்கு எட்டியின் சலனப்படம் எடுக்கும் புகைப்படக் கருவி (movie camera) இருப்பதைக் கண்டேன். அந்த மலைகளின் உச்சியில் கலைமானின் சாணத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அது உயரே, மரங்கள் வளர முடியாத இடத்தில் இருந்தது. நான் எட்டியை மலையின் கீழ் கண்டேன். அவர் தமது விரல்களை இப்படி காட்டினார். அவர் இந்த இளம் ஆண் கலைமானை சந்தடியின்றி பின்தொடர்ந்து அதை சுட்டு வீழ்த்தினார். நாங்கள் அதை அறுத்து சுத்தம் செய்து விட்டு மறுபடியும் மலையின் மேல் சென்றோம். எங்களுக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்க, நாங்கள் போதிய அளவு கீழே வந்தோம். 25நான் இரு கண் தூர தரிசினியின் வழியாக சுற்று முற்றும் பார்த்தேன். எப்படியோ, நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு மையில் தூரத்தில் என் மிருகம் படுத்துக் கொண்டிருந்தது. அதை நான் பார்த்துவிட்டேன். நான், ''அதுதான் அது, அது தான் அந்த மிருகம்“ என்றேன். நான், ”இங்கு பாருங்கள், இந்த மிருதுவான பாறையைப் பாருங்கள், நாம் சுற்றி அந்த பக்கம் செல்ல வேண்டும்“ என்றேன். நான், ”ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அந்த கட்டம் போட்ட பச்சை...“ நான் பார்த்த போது, எட்டி கட்டம் போட்ட பச்சை ஷர்ட்டை அணிந்திருந்தார். நான், “எட்டி, நான் நினைத்தேன், நீங்கள்...” என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, நான் செய்யவில்லை. என் மனைவி அதை என் பையில் போட்டிருக்க வேண்டும். இன்று காலை நான் கட்டம் போடாத 'ஷர்ட்' ஒன்றை எடுத்து வைத்திருந்தேன். எனக்குத் தெரியாது. என் மனைவி அதை அங்கு வைத்திருக்க வேண்டும்” என்றார். தேவன் ஒரு போதும் ஒரு காரியத்திலும் தவறுபவர் அல்ல. அவர் பிழையின்றி எல்லாவற்றையும் செய்கிறவர். அங்கு அவர் கட்டம் போட்ட பச்சை 'ஷர்ட்' அணிந்திருந்தார். 26வழிகாட்டி என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, நீங்கள் எப்படி அதை சுடப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை“ என்றார். நான், “அது ஐம்பது மைல் தூரத்தில் இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அது என்னுடையது! அது எனக்குச் சொந்தமானது” என்றேன். நாங்கள் புறப்பட்டு மிருதுவான பாறை வழியாக ஓ, அந்த செங்குத்தான் சரிவில் ஏறினோம். நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். அந்த பெரிய கலை மானை நான் சுட்டு வீழ்த்தினேன். அதற்கு பலகை கொம்புகள் இருப்பதற்கு பதிலாக கூர்மையான கொம்புகள் இருந்தன. அப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதில்லை. தேவன் எவ்விதம் காரியங்களைச் செய்கிறார் என்று பார்த்தீர்களா? எனவே நாங்கள் பையன்களிடம், கீழே போய் குதிரைகளை எடுத்துக் கொண்டு, இறைச்சியையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் கீழே வரும்போது, எங்களை அங்கு சந்திக்கும்படி கூறினோம். ஏனெனில் சகோ. பட் சுற்று முற்றும் பார்த்து விட்டு, “சகோ. பிரான்ஹாமின் தரிசனம் என் சகோதரன் வலிப்பு நோயிலிருந்து குணமடையும் விஷயத்தில் உண்மையாயிருந்ததனால், இந்த மிருகம் எங்கிருந்தாலும் அது அவருக்குக் கிடைக்கும்” என்றார். எனவே அவர், “எங்களை கீழே வரும்போது சந்தியுங்கள். எங்களுக்கு அது கிடைக்கும்” என்றார். 27நாங்கள் அதை தோலுறித்த பிறகு, தோல், கொம்புகள், எல்லாமே சேர்த்து நூற்றிருபத்தைந்து பவுண்டு எடையிருக்கும். உடல் தோல் அல்ல, மேல் தோல் மாத்திரம். அவர், “சகோ. பிரான்ஹாமே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அதை என்னால் இங்கு தோலுறிக்க முடியவில்லை” என்றார். நானும் அவரும், ஒருவர் ஒரு பக்கமாக, “இந்த கொம்புகள் நாற்பத்திரண்டு அங்குலம் என்றா கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். “ஆம், ஐயா” என்றேன். அவர், ''அது தொண்ணூறு அங்குலம் போல் எனக்கு காணப்படுகிறது“ என்றார். நான், “அது நாற்பத்திரண்டு அங்குலம் தான்” என்றேன். அவர், “என் சேணப்பையில் அளக்கும் நாடா உள்ளது” என்றார். நான், “சரி, அது சரியாக நாற்பத்திரண்டு அங்குலம் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்”, என்றேன். அவர், “அப்படியானால், நீர் என்னிடம் கூறினபடி, நாம் உள்ள இடத்திற்கும் அந்த பையன்களை நாம் சந்திக்கப் போகும் இடத்திற்கும் இடையே, அந்த 'பச்சை ஷர்ட்' அணிந்து கொண்டிருக்கையில் உங்களுக்கு வெள்ளி முனை கரடி கிடைக்கும் என்றா கூறுகிறீர்கள்? என் வாழ்நாள் பூராவும் இந்த மலைகளிலே நான் வாழ்ந்திருக்கிறேன். நான் ஒன்றையும் கூட இதுவரை கண்டதில்லை” என்றார். நான், “அது கர்த்தர் உரைக்கிறதாவது”, என்றேன். 28அவர், “அது எங்கிருக்கிறதென்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார். நான், “இல்லை, ஆனால் அது இவ்விடத்திற்கும் பையன்கள் உள்ள இடத்திற்கும் இடையே எங்கோ உள்ளது” என்றேன். அந்த பையன்கள் கீழே எங்கிருந்தனர் என்று எங்களால் காண முடிந்தது. அவர்கள் சுமார் மூன்று மைல் தொலைவில் மரங்கள் வளரும் இடத்தில் இருந்தனர். நான், “நமக்கு அது கிடைக்கும்” என்றேன். அவர், “நாம் ஒன்றரை மணி நேரத்துக்குள் அந்த இடத்தை அடைந்துவிடுவோம். இந்த இடத்துக்கும் பையன்கள் உள்ள இடத்துக்கும் இடையே உங்களுக்கு மூர்க்கமான பெரிய வெள்ளி முனை கரடி கிடைக்கும் என்றா கூறுகிறீர்கள்?” என்றார். நான், “அது அவருடைய வார்த்தையின்படி” என்றேன். அவர், “அப்படியானால் அது அங்கிருக்கும்” என்றார். எனவே நாங்கள் கொம்புகளை கட்டி எங்கள் தலைகளின் மேல் வைத்துக் கொண்டு, அதை இழுத்துக் கொண்டு சென்றோம். நாங்கள் கீழே சென்று பனிக்கட்டி ஆறுகளை அடைந்தோம். அங்கு அடைந்தபோது, மிகவும் உஷ்ணமாயிருந்தது. உஷ்ணத்தைப் போக்கிக் கொள்ள நாங்கள் பனிக்கட்டி ஆறுகளில் இறங்கினோம். நாங்கள் பனிக்கட்டி ஆறுகளைக் கடந்து, அவைகளின் கீழே தண்ணீர் வந்து கொண்டிருக்கும் இடத்தை அடைந்து, அப்படியே கீழே சென்று... மரங்களை அடைந்தோம். சற்று இளைப்பாற நாங்கள் உட்கார்ந்தோம். நான் திரும்பிப் பார்த்தேன். நான், ''பாருங்கள், பட், இரண்டு மைல் தொலைவில் பசுவைப் போல் ஏதோ ஒன்று உள்ளது என்றேன். அவர் தூர தரிசினியின் வழியாகப் பார்த்து, ''சகோ. பிரன்ஹாம், அது வெள்ளி முனைக் கரடி. வெயிலில் அது பளபளப்பதைப் பாருங்கள்“ என்றார். நான், ''அதுதான் அது. நாம் போய் அதை சுடுவோம்'' என்றேன். அதை தான் நாங்கள் செய்தோம், நாங்கள் சென்று தரிசனத்தில் கண்ட விதமாக அதைச் சுட்டோம். அதை தோலுறிக்க அப்பொழுது நேரமாகிவிட்டது. நாங்கள் அடுத்த நாள் வரைக்கும் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. 29நாங்கள் கரடியைச் சுட்டுவிட்டு, கீழே வந்து கொண்டிருக்கும் போது அவர், ''அந்த கொம்புகள். அவை நாற்பத்திரண்டு அங்குலம் இருக்குமானால், சகோ. பிரான்ஹாம் நான் மயங்கி விழுந்துவிடுவேன்“ என்றார். நான், “நீங்கள் மயங்கி விழவேண்டிய அவசியமில்லை. அவை நாற்பத்திரண்டு அங்குலம் தான்” என்றேன். எனவே நாங்கள் கீழே இறங்கி... நான் நினைத்தேன், தரிசனத்தில்... இது நடப்பதற்கு முன்பு இதை நான் கூறக் கேட்ட சகோதரரும் சகோதரிகளும் உங்கள் கைகளையுயர்த்தினீர்கள். அது பில்லிபாலாக இருக்க வேண்டும் என்று நான் கூறினேன். அவன் ஒரு சிறு பையன். நான் ஏதோ ஒரு சிறு கை என்று கூறினது உங்களுக்கு ஞாபகமிருக்கும். அவருடைய மகனுக்கு பதினெட்டு வயது. அவன் பில்லிபால் அளவுதான், பாருங்கள்? 30நான் கீழே இறங்கி வந்த போது எட்டி கட்டம் போட்ட 'பச்சை ஷர்ட்' அணிந்து அங்கு நின்று கொண்டிருந்தார். அந்த சிறு கை அந்த கொம்புகளின் மேல் போவதை நான் கண்டேன். அவர் சென்று அளக்கும் நாடாவைக் கொண்டு வந்து அதை பிடித்தார். அந்த சிறுவன் தன் கைகளை வைத்தான். நான், “பாருங்கள், எட்டி, அந்த சிறு கைகள் கொம்பின் மேல்” என்றேன். அவர் அளக்கும் நாடாவை இப்படி இழுத்து பிடித்தபோது, அவர் என்னை நோக்கினார். அவருடைய வாய் வெளுத்துப் போனது. அவர், ''சகோ. பிரன்ஹாமே, இங்கு பாருங்கள், இறுகப் பிடித்தால், அது சரியாக நாற்பத்திரண்டு அங்குலம்“ என்றார். நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, ஞாயிறு பள்ளியில் இதையெல்லாம் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்கலாம். இதை ஒரு காரணத்துக்காகவே கூறுகிறேன். பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த துறவர்களும் தீர்க்கதரிசிகளும் பரலோகத்தின் தேவனை தொழுது வந்தனர். அவர் அவர்களுக்கு தரிசனங்களை அருளினார். அவர்களை நேசித்த தேவனை அவர்கள், அவருடைய கிருபையினால் நேசித்தனர். அவர்கள் எங்கோ இருந்த ஒரு நகரத்துக்காக ஆவல் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஏதோ ஒன்றிருந்தது! அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு சஞ்சாரிகளாய் திரிந்தார்கள். ஏனெனில் அவர்கள் எங்கோ இருந்த ஒரு நகரத்துக்காக காத்திருந்தனர், அவர்கள் முன்னுரைத்த காரியங்கள், இன்று நிகழ்வதை நாம் காண்கிறோம். 31அவர்களை நேசித்து, அவருடைய கிருபையினால் அவர்களுக்கு இவைகளைச் செய்த அதே தேவனை இன்று காலையில் நாம் இந்த கூடாரத்தில் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் அதே காரியங்களைச் செய்து கொண்டு வருகிறார். நம்முடைய இருதயத்தில் அவர்கள் சென்றுள்ள எங்கோ உள்ள அந்த நகரத்துக்காக ஆவல் எழுந்து கொண்டிருக்கிறது. அவருடைய வார்த்தையினாலும், அவருடைய வல்லமையின் அடையாளங்களினாலும், அவர் அதே ஆவியினால், அதே தீர்க்கதரிசனங்களினால், அவர்களுக்கு முன்காலத்தில் செய்த அதே காரியத்தை இன்றைக்கு நமக்கு செய்து வருகிறார். அதை நீங்கள் என்றும் தவறாத நிரூபணங்களால் கண்டு, அது தேவன் என்றும் தேவனுடைய சத்தியம் என்றும் அறிந்திருக்கிறீர்கள். எனவே, அந்த நகரம் எங்கேயிருந்தாலும், முன் காலத்து பரிசுத்தவான்கள் எங்கே கூடியிருந்தாலும், மரணத்தருவாயிலுள்ள என் தாயையும் உங்களையும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தானியேல், ஏசாயா, எரேமியா போன்றவர்களுடன் அந்த நகரத்தில் காணுவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவர்களை நேசித்து, அவர்களுக்கு தரிசனங்களை அருளி, வரப்போகும் காரியங்களைக் காண்பித்த அதே தேவன் இன்றைக்கு அதே காரியங்களை நமக்குச் செய்து கொண்டு வருகிறார். இது தவறாத சத்தியம்! நண்பனே, இது சத்தியம். 32எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இவைகளை நான் ஏன் கூறும்படி செய்தீர், ஒருக்கால் ஒரு அதிர்ச்சி எனக்கு உண்டாகப் போகிறது என்பதை அறிந்தவராய், என்னை நீர் உற்சாகப்படுத்தி கொண்டிருந்தீர் என்று நினைக்கிறேன், கர்த்தாவே, எனக்குத் தெரியாது; நீர் அறிந்திருக்கிறீர், நான் இன்னும் சிறு பையன் அல்லவென்றும் இப்பொழுது நான் என் தாயின் மேல் ஆடையில் (apron) தொங்கிக் கொண்டிருந்த சிறுவன் அல்லவென்றும் அறிந்திருக்கிறேன். இப்பொழுது நான் நடுத்தர வயதுள்ளவன். ஓ, உம்மை நான் எவ்வளவாக நேசிக்கிறேன், கர்த்தாவே! ஓ, உம்மை நான் எவ்வளவாக விசுவாசிக்கிறேன்! இப்பொழுது எங்களுக்கு கிருபையைத் தாரும், மற்றவர்கள் கண்டு, படித்து உம்மைப் பற்றி அறிந்துகொள்ள, உமது வார்த்தையைப் போதிக்க எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 33இன்று காலைக்கு பொருளாக; அவ்வளவுதான் நான் சொல்ல வேண்டியவை என்று நினைக்கிறேன். இன்றிரவு ஆராதனையில் அப்பம் பிட்குதல், பாதங்களைக் கழுவுதல் போன்றவை அவ்வளவு தான். நீங்கள் எங்களுடன் இரவு ஆராதனைக்கு தங்கிவிட்டுப் போகும்படி உங்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டேன். இன்று காலையின் பொருளுக்கென, நாம் வேதாகமத்தை பரி. மத்தேயு: 3-ம் அதிகாரத்துக்குத் திருப்பி, ஒரு பாகத்தை வாசிப்போம். நான் 10-ம் வசனத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன். 34அநேகர் நின்று கொண்டிருக்கின்றனர் என்று அறிகிறேன். இதைக் காண எங்களுக்கு மன வேதனையாய் உள்ளது. எப்பொழுதாவது ஒரு முறை உங்களில் சிலர் இருக்கைகளை மாற்றிக் கொண்டால், நான்... நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக என்னை மன்னியுங்கள், ஆனால் நான்... உங்களுக்கு விளங்கும். இப்பொழுது வேத வாசிப்பு: இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்! எனக்குப் பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து; நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக; இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். மத்தேயு 3: 10-15. 15-ம் வசனத்திலிருந்து நான் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ...இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. 35பல முறை நான் வியந்ததுண்டு, நசரேயனாகிய இயேசு ஏன்... இயேசுவைப் போன்ற ஒரு மனிதர் ஏன் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று என்னிடம் பல முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த நபர் பரிசுத்த கறையற்ற கலப்படமற்ற ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாக இருக்கும் போது அவர் ஏன் மனந்திரும்பி அறிக்கையிடும் செயலாக ஞானஸ்நானம் பெற வேண்டும்? ஒரு மனிதனைப் போல் ஏன் ஞானஸ்நானம் பெற வேண்டும்? அறிக்கைக்கு பிறகே செய்ய ஒன்றும் இருக்கவில்லை. அவருக்கு மனந்திரும்புதல் அவசியமில்லாதிருக்கும் போது அவர் ஏன் “மனந்திரும்புதலுக்கேற்ற” ஞானஸ்நானம் பெற வேண்டும்? அவர் பிழையற்ற தேவனாயிருந்தாரே?, “அவர் உலகத்தில் இருந்தார் உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை”, அவர் ஏன் ஞானஸ்நானம் பெற வேண்டும்? 36அதற்கு முன்புள்ள சொற்றொடரை கவனித்தீர்களா? ...இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. வேறு விதமாகக் கூறினால், “அது நிறைவேற வேண்டும்! தேவன் உரைத்த சகல வார்த்தையும் நிறைவேற வேண்டும்”, தேவன் ஒன்றை நிறைவேற்றாமல் அதைக் கூற முடியாது. அவர் அதை உரைத்துவிட்டால், அது முடிந்து போன கிரியை, தேவன் அதை உரைக்கும் போது, அது ஏற்கனவே முடிந்துவிட்டது. அதற்காக ஆயத்தமாயிராமல் தேவன் ஒருபோதும் உரைப்பதில்லை. அவர் உரைக்கும்போது, அது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இப்பொழுது, நமது விசுவாசத்தை இன்று காலையில் வைப்பதற்கு அது நமக்கு ஆதாரமாய் அமைந்திருக்கும் அல்லவா? தேவன் ஒரு வார்த்தையை உரைத்தால், அது ஏற்கனவே முடிந்துவிட்டது. அவர் நமக்கு அளித்துள்ள அவருடைய வாக்குத்தத்தங்களை குறித்து என்ன? அவர் உரைத்த ஒவ்வொன்றும் ஏற்கனவே முடிந்தவிட்ட கிரியை. எனவே அவருடைய வார்த்தையை நமது இருதயத்தில் நாம் ஏற்றுக் கொள்ளும்போது, அது ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது, அது முடிந்துவிட்டது! 37அப்படியானால் அவர் ஏன் ஞானஸ்நானம் பெற வேண்டும்? (அந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை). அநேகர், “அவர் நமக்கு உதாரணமாயிருப்பதால், ஞானஸ்நானம் பெற்றார் என்கின்றனர். அது உண்மை, ஓரளவுக்கு உண்மை. அது உண்மை, ஆனால் அது உண்மை அனைத்துமல்ல. உண்மை என்னவெனில், அவர் முன்னடையாளத்தின் நிறைவேறுதலாக இருந்தார் (ante type). அவர் பிரதான ஆசாரியர். பிரதான ஆசாரியன் அபிஷேகம் பண்ணப்படுவதற்கு முன்பு கழுவப்பட வேண்டும். 38உங்களுக்கு சில வேத வசனங்களை யாத்திராகமம் புத்தகத்திலிருந்து வாசித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அது 29-ம் வசனம் என்று எழுதி வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன், இல்லை, 29-ம் அதிகாரம். நான் 29-ம் அதிகாரத்தில் 4-ம் வசனத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன். ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப் பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி, அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள் சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப் பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்கு கட்டி, அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கீரிடத்தைப் பாகையின் மேல் தரித்து, அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின் மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ் செய்வாயாக. யாத். 29:4-7 39பாருங்கள், பிரதான ஆசாரியனாகிய ஆரோன் அபிஷேகம் செய்யப்படுவதற்கு முன்பு தண்ணீரினால் கழுவப்பட வேண்டியதாயிருந்தது. அது போல், நமது பிரதான ஆசாரியராகிய இயேசுவும் அபிஷேகம் செய்யப்படுவதற்கு முன்பு தண்ணீரினால் கழுவப்பட்டார். அதன் பிறகு அவரை அபிஷேகம் செய்ய, அந்த அபிஷேகத் தைலம் அவர் மேல் ஊற்றப்பட்டது. ஆரோன் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டது போல், இவர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டார். தேவ ஆவியானவர் அவர் மேல் புறாவைப் போல் இறங்கி வருகிறதையும், ஒரு சத்தம், “இவர் என்னுடைய நேசக்குமாரன், இவரில் வாசமாயிருக்கப் பிரியமாயிருக்கிறேன்” என்றுரைத்ததையும் யோவான் கண்டு சாட்சியாக அறிவித்தான். “இயேசு பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, நன்மை செய்கிறவராய் சுற்றித் திரிந்தார்”, என்று வேதம் கூறுகிறது. பாருங்கள், அவர் அபிஷேகம் பண்ணப்பட்டார். 40அவர் அபிஷேகம் பண்ணப்படுவதற்கு முன்பு, எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டியதாயிருந்தது. பாருங்கள், அபிஷேகம் அவர் மேல் வருவதற்கு முன்பு, அவர் தண்ணீரினால் கழுவப்பட வேண்டியதாயிருந்தது. இன்றைக்கு தேவனுக்கு ஆசாரியர்களாக இருக்கும் நமக்கு அது மிகவும் அழகான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நாம் முதலில் ஞானஸ்நானம் பெற வேண்டும், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, நம்முடைய பாவங்களைத் கழுவிக் கொள்ள வேண்டும். அப்பொழுது நீங்கள் அபிஷேகத்தை, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். பாருங்கள், முதலில் கழுவப்பட்டு, அதன் பிறகு ஊழியத்துக்காக அபிஷேகம் பண்ணப்படுதல், எந்த ஒரு போதகரும் முதலில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறாமல் பிரசங்க பீடத்தில் ஏறக் கூடாது. ஏனெனில் ஒரே ஒரு பாவமன்னிப்பு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரமே, வானத்தின் கீழே மனுஷர்களுக்குள்ளே வேறெந்த நாமமும் கட்டளையிடப்படவில்லை. “மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்பட வேண்டியது”. அங்கு தான் பரிசுத்த ஆவி முதலில் விழுந்து அபிஷேகம் பண்ணினார். எனவே, ஒரு போதகர் அல்லது எந்த விசுவாசியும் முதலாவதாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தன் பாவங்களிலிருந்து கழுவப்பட வேண்டும்; அதன் பிறகு தேவனுக்கு சாட்சியாயிருக்க பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட வேண்டும். 41கிறிஸ்து தேவனுக்கு சாட்சியாயிருந்தார், ஏனெனில் தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து உலகத்தைத் தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார். அவர், “யோவானே, இப்பொழுது இடங் கொடு”, என்றார். அது உண்மை. வேறு விதமாகக் கூறினால், “யோவானே, நீ மகத்தானவன். நீ ஒரு பெரிய மகத்தான தீர்க்கதரிசி, என்னைக் குறித்து உனக்கு கிடைத்துள்ள வெளிப்பாடு முற்றிலும் உண்மையே, நான் யாரென்றுஉனக்குத் தெரியும். உனக்கு அது தெரியும், ஏனெனில் உன் ஊழியம் மனிதனிடத்திலிருந்து வந்த ஒரு ஊழியமல்ல, அது தேவனிடத்திலிருந்து வந்த ஒன்று. நீ அதை மனிதனிடத்திலிருந்து கற்றுக் கொள்ளவில்லை, அதை நீ வேத பள்ளியிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உனக்கு ஒன்பது வயதான போது, நீ வனாந்தரத்துக்குச் சென்றாய், ஏனெனில் நீ வினோதமான, விசித்திரமான பிள்ளையாகப் பிறந்தாய். உன்னுடைய பிறப்பு முதற் கொண்டே தேவன் உன்னுடன் இடைப்படத் தொடங்கினார். நீ பிறப்பதற்கு முன்பே, தீர்க்கதரிசி உன்னைக் கண்டான். நீ இந் நாளின் ஒளியாயிருக்கிறாய். வனாந்தரத்தில்... நான் யாரென்று உனக்குத் தெரியும், ஏனெனில் தேவன், என்னை ஒரு அடையாளம் தொடரும் என்று உன்னிடம் வனாந்தரத்தில் சொன்னார். நீ ஏற்கனவே அதை சாட்சியாக அறிவித்துவிட்டாய், உனக்கு அது தெரியும். நாம் யாரென்று ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். நீ என்னால் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பது உண்மையே. ஆனால் யோவானே, இப்பொழுது இடங்கொடு. நாம் உலகத்தின் ஒளிகளாக இருப்போமானால், நாம் எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டும். இந்நாளுக்கான தேவனுடைய வார்த்தை அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும், அது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. யோவானே, நாம் இன்றைக்கு தேவனுடைய உண்மையான சாட்சிகளாய் இருப்போமானால், இக்காலத்தின் ஒளிகளாக நாம் இருக்கிறோம். இக்காலத்தின் ஒளிகளாக நாம் இருப்போமானால், இக்காலத்தில் எத்தனையோ வேதவசனங்கள் நிறைவேற வேண்டியதாயுள்ளது. அது நம்முடைய பொறுப்பு” அல்லேலூயா! “தேவனுடைய சகல நீதியையும் நிறைவேற்றுவது நம்முடைய பொறுப்பு”. அவருடைய நீதி எது? அவருடைய வார்த்தை! 42வேறு விதமாகக் கூறினால், “யோவானே, நான் யாரென்று உனக்குத் தெரியும். நான் பிரதான ஆசாரியன். அது உண்மை. யோவானே, நான் உன்னால் ஞானஸ்நானம் பெற வேண்டும். நாம் எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டும். தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற நான் இப்பொழுது உன்னால் ஞானஸ்நானம் பெற வேண்டும். ஏனெனில் எல்லா வார்த்தையும் நிறைவேற வேண்டும். நாம் இந்நாளின் ஒளிகளாக இருக்கிறோம். இது அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு. உன்னுடைய நீதியும் உன்னுடைய வாஞ்சையும் வார்த்தையை நிறைவேற்ற வேண்டும் என்பதே என்று நானறிவேன். அது நம்முடைய பொறுப்பு. நாம் ஒளிகள்”. ஒவ்வொரு காலத்தின் ஒளியும் அதே காரியத்தைச் செய்ய வேண்டும். என்ன நிறைவேற வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். உங்களில் ஆவிக்குரியவர்களாயிருந்து தேவனுடைய வார்த்தையை அறிந்துள்ளவர்கள், தேவன் என்ன வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதைக் காண்கிறீர்கள். வார்த்தை எளிதாக வராது, அது கவனித்தலினால் வருகிறது, அதைச் செய்ய நீங்கள் முயற்சிக்க வேண்டும். எல்லா தேவனுடைய நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. நாம் அதைச் செய்ய வேண்டும். 43யோவான் உண்மையான தீர்க்கதரிசி என்று இயேசு அடையாளம் கண்டு கொண்டார். வார்த்தை யோவானைக் குறித்து உரைத்திருந்தது, அவன் முற்றிலுமாக அந்த நேரத்தின் தீர்க்கதரிசி என்று அவர் அறிந்திருந்தார். யோவானும் இயேசு அந்த நேரத்தின் மேசியா என்பதை அறிந்திருந்தான். இருவருக்குமே தெளிவான புரிந்து கொள்ளுதல் இருந்தது. ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபை இன்று காலை அதை தங்கள் மண்டையிலும் தங்கள் இருதயத்திலும் கிரகித்துக் கொள்ளுமானால்; சபையானது ஸ்தாபன தடைகளினாலும், கோட்பாடுகள், நிறங்கள், வேற்றுமை, போன்றவைகளினாலும் பிரிந்திருக்காது. நாம் அப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஒன்றுபட்டு, ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான வார்த்தையிலிருந்து நம்மை அகற்றுவதற்கு ஒன்றுமே இருக்காது. நாம் வேத வாக்கியங்களுடன் வரிசைப்படுத்தி நடந்து, இன்றைய தேவனுடைய எல்லா நீதியையும் நிறைவேற்றுவோம். நாம் சாயங்கால வெளிச்சத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எவருக்குமே தெரியும். தீர்க்கதரிசி, “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்று கூறினான். எனவே நாம் அந்த நேரத்தில், சாயங்கால வெளிச்சத்தின் நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நமக்குத் தெரியும், தேவனாகிய கர்த்தர் தாமே அதை உணர நமக்குதவி செய்வாராக. 44நாம் சிறிது வேதத்துக்குச் சென்று, அவர்கள் காலத்தில் தங்கள் ஸ்தானத்தை அறிந்திருந்து, தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதற்கென, எந்த குறைகூறுதலையும் சகிக்கச் சித்தமாயிருந்த மனிதர்களைப் பார்ப்போம். உதாரணமாக, நோவாவையும் அவன் காலத்தையும் நாம் எடுத்துக் கொள்வோம். அவன் தேவனைச் சந்தித்து அக்காலத்துக்கான தேவனுடைய திட்டத்தை அறிந்து கொள்வது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறியாமல் ஒன்றையும் செய்ய முடியாது. அது தேவனுடைய சித்தம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அது அவருடைய திட்டம் என்றும் அவருடைய விருப்பம் என்றும் உங்களுக்கு வெளிப்பட்டிருக்குமானால், ஒன்றுமே அதை தடுத்து நிறுத்த முடியாது. 45இப்பொழுது, நோவா இதை அறிந்திருந்தான். அவன் தன் ஊழியத்தை ஏதோ கல்வி பயிலும் பள்ளியில் பெறவில்லை, அவன் தேவனுடன் முகமுகமாய் பேசினான். ஜலப்பிரளயம் வரப்போகிறது என்பதை அவன் அறிந்திருந்தான். அது அக்காலத்து விஞ்ஞான விவகாரங்களுக்கு முற்றிலும் விரோதமாக இருந்த போதிலும், வானங்கள் மழையைப் பொழியும் என்றும், ஆறுகள் உடைந்து போகும் என்றும் அவன் அறிந்திருந்தான். விஞ்ஞானிகள் நோவாவை குறைகூறி, ''மேலே தண்ணீர் இல்லை என்பதை எங்களால் விஞ்ஞான பூர்வமாய் நிரூபிக்க முடியும்'' என்று கூறினார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் ஒரு மகத்தான காலத்தில் வாழ்ந்தனர். நாம் வாழும் காலத்தை விட அதிக மகத்தான காலம், அதிக விஞ்ஞான அறிவு நிறைந்த காலம். இயேசு, “நோவாவின் காலத்தில் நடந்தது போல்” என்று உரைத்து அக்காலத்தைக் குறிப்பிட்டார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஸ்பிங்க்ஸ்களையும், கூர்நுனிக் கோபுரங்களையும், கட்டினர். இன்று அத்தகைய பிரம்மாண்டமானவைகளை நாம் கட்டவே முடியாது. அவர்கள் பெரிய விஞ்ஞானிகளாயிருந்தனர். அவர்களுக்கு கெட்டிச் சாயம் இருந்தது. அவர்கள் பெற்றிருந்த சவத் தைலத்தினால் 'மம்மி'களை உண்டாக்கினர். இன்றைக்கு நம்மால் அவ்விதம் செய்ய முடியாது. அவர்கள் நம்மைக் காட்டிலும் அதிகம் முன்னேறியிருந்தனர். மேலே தண்ணீர் இல்லை என்று அவர்களால் நிரூபிக்க முடிந்தது. ஆனால் அதே நேரத்தில் காரியமானது நோவாவிற்கு வெளிபடுகிறது. அவன் தேவனுடைய திட்டத்தை அறிந்தவுடன் அந்த நேரத்திலேயே அவன் அந்த பேழையை கட்டத் துவங்குகிறான். ஏனென்றால் அந்த பேழை மட்டுமே மிதக்கக்கூடியது என்பதை அவன் அறிந்திருந்தான். அறிவியலைக் கொண்டு மேலே தண்ணீர் இல்லை எனறு நிரூபித்தாலும் அது ஒரு பொருட்டல்ல. தேவனுடைய வார்த்தை மழையை பெய்யும் என்று சொன்னால் நிச்சயமாகவே மழை பெய்யும். 46வியாதியஸ்தர் நிமித்தம் இதைக் கூற இங்கு நிறுத்திக் கொள்கிறேன். உங்களுடைய வியாதி மிகவும் மோசமடைந்து, நீங்கள் பிழைப்பீர்கள் என்ற நம்பிக்கையில்லை என்று மருத்துவர் கூறியிருக்கலாம். ஆனால் தேவன், ''உங்களைப் பிழைக்கச் செய்யப் போகிறேன்“ என்று உங்களிடம் கூறும்போது, மருத்துவரின் சொற்கள் என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணும்? ஏன்... மருத்துவர் அல்லது ஏதோ ஒரு விஞ்ஞானி, ''நீங்கள் குறிப்பிடும் உங்கள் மார்க்கம், பரிசுத்த ஆவி, அந்நியபாஷை பேசுதல், கிரியைகள் அனைத்தும் மனதில் எழும் மாயையான தோற்றம்“ (mental illusion) என்றும், ”நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்படவில்லை“ என்றும், ”அப்படிப்பட்ட ஒன்று கிடையாது என்றும் கூறலாம்“. இன்று ஆயிரக்கணக்கான குருவானவர்கள், ”நீங்கள் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறீர்கள் என்றும்“, ”அப்படிப்பட்ட ஒன்று கிடையாது“ என்றும் சொல்லுகின்றனர். 47அவர்களில் சிலர் என்னிடம், “நீங்கள் ஏதாகிலும் ஒரு நல்ல ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டு, அதன் வளர்ச்சிக்காக உங்கள் செல்வாக்கை பயன்படுத்தலாமே” என்று கேட்டிருக்கின்றனர். வேறு சிலர், “நீங்கள் தொடர்பு கொண்டிருக்கும் இந்த பெந்தெகொஸ்தே கூட்டம் மத சம்பந்தமான பித்தலாட்டக்காரர்கள். அவர்கள். அப்படிப்பட்ட ஒன்று கிடையாது. அவர்கள் உணர்ச்சிவசப்பட்ட மனநிலை கொண்டவர்கள். அவர்கள், அவர்கள் வெறும்... அவர்கள் பெற்றுள்ளதாகக் கூறிக் கொள்வது அவர்களிடம் கிடையாது. அதை எங்களால் நிரூபிக்க முடியும்” என்கின்றனர். ஓ, சகோதரனே, நீ அதிகம் காலதாமதமாகிவிட்டாய். நாங்கள் எதைப் பெற்றுள்ளோம் என்பதை அறிந்திருக்கிறோம். நாங்கள் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து, வேதாகம காலத்தில் இருந்தது போல், அவருடைய கிரியைகளை எங்கள் மத்தியில் காண்கிறோம். நீங்கள் அதே பரிசுத்த ஆவியில் விசுவாசம் கொண்டிருந்தால், அவர் ஏன் இதே கிரியைகளை உங்கள் சபையில் செய்வதில்லை? ஏனெனில் அவர் மாறாதவர், அவர் தேவன். 48எனவே, விஞ்ஞான நிரூபணங்கள் எதுவாயிருந்தாலும், நாம் “உணர்ச்சிவசப்பட்டவர்கள்”, ''மனநிலை சரியில்லாதவர்கள்“, ''அவர்கள் பெரிய மார்க்கம் என்று கூறிக் கொள்ளும் இதில் உண்மையில் ஒன்றுமில்லை'', ”அது இருக்க வேண்டிய விதமாக இல்லை“, என்று பல வகையாக கூறி, நம்மைப் புறம்பாக்கப்பட்ட ஒரு கூட்டமாக கருதினாலும், அவர்கள் கூறுவதை விசுவாசிக்காதீர்கள்! அதை விசுவாசிக்கிறீர்கள்! உங்கள் மகள் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பி, “அம்மா, மனிதனின் மண்டை ஓடு வாலில்லாக் குரங்கின் (Chimpanzee) மண்டை ஓட்டைப் போன்றுள்ளது என்று இன்று நாங்கள் நிரூபித்தோம்”, என்றோ அல்லது “நாமெல்லாரும் ஒரே ஒரு இரத்த அணுவிலிருந்து (Cell) தோன்றினவர்கள் என்று படித்தோம், நாம் வெறும் மிருகங்கள் என்று கண்டுகொண்டோம்” என்றோ கூறினால், அதை நம்பாதீர்கள்! வேதபண்டிதர், மருத்துவர், விஞ்ஞானி, ஆசிரியர் என்ன கூறினாலும் அதை பொருட்படுத்தாமல், தேவனுடைய வார்த்தையை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். நோவா தன் காலத்தில் ஒரு பேழையை உண்டாக்கினது போல, இப்பொழுது நாம் ஒரு பேழையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அந்த பேழையை உண்டாக்கி முடிக்காவிட்டால். அவனுடைய வீட்டார் காக்கப்பட முடியாது என்பதை நோவா அறிந்திருந்தான். அவன் தேவனுடைய திட்டத்தை அறிந்திருந்தான். குறை கூறுதல் அவனைச் சிறிதும் தொல்லைப்படுத்தவில்லை. அவன் சுத்தியல் கொண்டு அடித்து அந்த பேழையை உண்டாக்கிக் கொண்டிருந்தான். 49எனவே, அவர்கள் எவ்வளவாக, “பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பது கிடையாது'' என்று கூறினாலும், எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது, இந்த சோதனையின் நேரத்தில் நாம் உறுதியாய் நின்று கர்த்தருடைய பேழையைத் தொடர்ந்து உண்டாக்குவோம்! அவர்கள், “சகோதரனே, ஞானஸ்நான விஷயத்தில் நீங்கள் குழம்பியிருக்கிறீர்கள். அது... நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவது தவறு'' என்கின்றனர். 50நேற்று மாலை ஒரு அருமையான தம்பதிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த இளைஞன் இப்பொழுது தான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டு, ஒரே தேவன் உண்டு என்பதை விசுவாசிக்கிறார். அவர் மூன்று தெய்வங்களில் விசுவாசம் கொண்டிராதலால் வர்த்தகர் கூட்டத்தில் சாட்சி கூற அவருக்கு அனுமதியளிக்கவில்லை. அவர்கள் என்ன கூறினாலும், எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. வர்த்தகர் சங்கங்களும், சபைகளும் மறைந்துவிட்ட பின்பும் வார்த்தை மாறாமல் நிலைத்திருக்கும். தேவனுடைய வார்த்தை மாறாமல் அப்படியே இருக்கும்! எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. இந்த நாளைக் குறித்து தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கவில்லையா? குற்றம் கண்டுபிடிப்பவர்களும் அதை நிறைவேற்றுவது அவர்களுக்கு ஏற்றதாயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அதுவும் நிறைவேறியே ஆக வேண்டும். 51நோவாவைக் குற்றம் கண்டுபிடித்தல் அவனை தொல்லைப்படுத்தவில்லை. அவன் தொடர்ந்து பேழையை உண்டாக்கிக் கொண்டிருந்தான். ஏனெனில் அவன் தேவனுடைய திட்டத்தை அறிந்திருந்தான். சகோ. கிட், தேவன் என்ன செய்யப் போகிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் தேவனுடைய வரைபடத்தை அறிந்திருந்தான். ஏனெனில் அவன் தேவனுடன் உரையாடினான். அவனுடைய செயல் தேவனுடைய வார்த்தையின்படி அமைந்திருந்தது. எனவே அவன் எப்படியும் அதை தொடர்ந்து செய்தான். விஞ்ஞானம் அதை நிரூபிக்க முடிந்தாலும் முடியாமல் போனாலும், குற்றம் கண்டுபிடிப்பு எவ்வளவாக நோவாவின் மேல் சுமத்தப்பட்ட போதிலும், அவன் தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நின்று பேழையை தொடர்ந்து உண்டாக்கிக் கொண்டிருந்தான். ஏன்? அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. ஏனெனில் நோவா ஒரு தீர்க்கதரிசி. தேவனுடைய வார்த்தையைக் கைக் கொள்வது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவன் அதில் நிலை நின்றான். எந்த ஒரு தீர்க்கதரிசியும், தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியும், வார்த்தையில் நிலைத்திருப்பது அவனுக்கு ஏற்றதாயிருக்கிறது. விஞ்ஞானம் எதைக் கூறினாலும், இது இதை நிரூபிக்க முடிந்தாலும், எல்லா நீதியையும் நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது. 52(சகோ. பிரான்ஹாம் பிரசங்கத்தை நிறுத்திவிட்டு மெளனமாக அவர் கையில் கொடுக்கப்பட்ட ஒரு சிறு குறிப்பைப் படிக்கிறார் - ஆசி) சரி. என் தாயாருக்காக நான் இப்பொழுதே ஜெபிக்க வேண்டும் என்று அவர்கள் செய்தி அனுப்பியுள்ளனர். ''இப்பொழுதே அவர்களுக்காக ஜெபியுங்கள். மருத்துவர் இப்பொழுது தான் இங்கிருந்து போனார். சரி''. கர்த்தராகிய இயேசுவே, இங்கு நான் நின்று கொண்டிருக்கிறேன். அது என் தாய். அவர்கள் போக வேண்டுமென்றால், அவர்களுடைய ஆத்துமாவை தேவனுடைய கரங்களில் சமர்ப்பிக்கிறேன். கர்த்தாவே, இந்த செய்தி தொடர்ந்து பிரசங்கிக்கப்பட வேண்டியதாயுள்ளது. இங்கு உயிரோடிருக்கிறவர்கள் மரிக்க வேண்டும். கர்த்தாவே, எனக்குதவி செய்யும். நான் உம்முடையவன், இயேசுவின் நாமத்தில் அது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. இப்பொழுது எல்லா நீதியையும் நிறைவேற்றுவது எனக்கு ஏற்றதாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தை முதலிடம் பெற வேண்டும்! தேவனுடைய அன்பைப் போல் வேறெந்த அன்பும் இல்லை! 53இப்பொழுது, தகப்பனாகிய நோவாவின் மேல் எவ்வளவு குற்றம் கண்டுபிடிப்பு சுமத்தப்பட்ட போதிலும், அவன் எங்கு நிற்கிறான் என்பதை அறிந்திருந்தான். எனவே அவன் வார்த்தையில் உறுதியாய் நின்றிருந்தான். அவன் தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு பேழையை உண்டு பண்ணினான். அவ்விதம் செய்வது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவ்விதம் செய்வது நோவாவுக்கு ஏற்றதாயிருந்தது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் வார்த்தையில் நிற்பது அவனுக்கு ஏற்றதாயிருக்கிறது. முற்றிலும் உண்மை. தேவனுடைய வார்த்தையில் நில்லுங்கள்! வானமும் பூமியும் ஒழிந்து போம், நீங்கள் ஒழிந்து போவீர்கள், நான் ஒழிந்து போவேன், சபைகள் ஒழிந்துபோம், ஸ்தாபனங்கள் ஒழிந்துபோம், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருக்காலும் ஒழிந்து போகாது! விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். விசுவாசமுள்ள யாத்திரீகர்களாய், 54ஏனோக்கின் காலத்தில், ஜலப் பிரளயத்துக்கு சற்று முன்பு, ஏனோக்கு வெளியே எட்டி பார்த்து நோவா பேழையை உண்டாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். ஏனோக்கு ஒரு தீர்க்கதரிசி, ஏனோக்கு, தான் ஒரு முன்னடையாளமாக இருப்பதை அறிந்திருந்தான். ஜலப்பிரளயம் உண்டாவதற்கு முன்பு அவன் ஒரு உதாரணத்தை அளிக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தான். எனவே ஒரு பிற்பகலில் அவன் நடந்து செல்வது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவன் தேவனுடன் இந்த நடையை மேற்கொள்வது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. எப்படியோ, அந்த குறிப்பிட்ட நாளில் அவன் வழக்கமாக செல்லும் வழியை மாற்றிக் கொண்டான். அவன் மலையின் அடிவாரத்தில் நடந்து செல்வதற்குப் பதிலாக ராஜாவின் பெரும் பாதையை தெரிந்து கொண்டு அதில் நடந்து கொண்டேயிருந்தான். “அவனை அவர்கள் காணவில்லை, ஏனெனில் அவன் காணப்படாமற் போனான்” அவன் ராஜாவின் பெரும் பாதையில் நடந்து மேலே சென்றான். ஓ தேவனே, நானும் ஏனோக்கைப் போல் இருப்பேனாக! பாதையில் நான் நடந்து செல்ல வேண்டிய நேரம் வரும்போது, ராஜாவின் பெரும் பாதையைக் கண்டு கொள்வேனாக! 55நான் ஏனோக்கைக் காணமுடிகிறது. அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். ஏனெனில் அவன் ஒரு தீர்க்கதரிசி, என்ன நடக்கப் போகிறதென்று அவன் அறிந்திருந்தான். எனவே அவன் மனைவியை முத்தம் செய்து விடைபெற்று, “உன்னை நான் பிறகு காண்கிறேன்” என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. அவன் தன் பிள்ளைகளை கையிலெடுத்து முத்தமிட்டு விடை பெற்றான்; விவாகமான தன் மகனிடமும், விவாகமான தன் மகளிடமும் சென்று அவர்களையும் முத்தமிட்டு விடைபெற்றான். அவர்கள், “அப்பா எங்கே போகிறீர்கள்? உலாவி வருவதற்கா?” என்று கேட்டார்கள். அவன், “ஆம், சிறிது உலாவி வரச் செல்கிறேன்” என்றான். ஆனால் அன்று அவன் வழக்கமாக செல்லும் வழியில் செல்லவில்லை. அவன் ராஜாவின் பெரும் பாதையில் நடந்து மகிமையை அடைந்தான். அப்படி செய்வது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவனுக்கு இவ்விடம் விட்டுச் செல்ல பிரியமில்லை. இருப்பினும் எல்லா நீதியையும் நிறைவேற்றுவது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. ஏனெனில் அவன் இன்றைய சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறான். நாம் ராஜாவின் பெரும் பாதையில் நடந்து இங்கிருந்து போய்விடுவோம். 56ஆம், எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நோவாவுக்கு ஏற்றதாயிருந்தது, ஏனோக்குக்கு ஏற்றதாயிருந்தது. மற்றுமொரு மனிதனைக் குறித்து இங்கு பேச விரும்புகிறேன். தானியேல் என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான். அவன் குற்றம் கண்டுபிடிப்பவர்களின் காலத்தில் வாழ்ந்தான். இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சொந்த தேசத்திலிருந்து பாபிலோனுக்குச் சிறை பிடித்துக் கொண்டு போகப்பட்டனர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர். ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக அவர்கள் அங்கிருந்தனர். சிறை பிடித்துக் கொண்டு போகப்பட்டவர்களில் தானியேல் என்னும் பெயருடைய ஒரு வாலிப தீர்க்கதரிசி இருந்தான். அவனும் அவனைச் சேர்ந்த ஒரு சிறு கூட்டமும், எண்ணிக் கையில் மிகக் குறைந்த சகோதரர்கள், ஒன்று கூடி, அக்காலத்திலிருந்த நவீனப் போக்கினால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதில்லை என்று தேவனுக்கு முன்பாக பொருத்தனை பண்ணிக் கொண்டார்கள். அவர்கள் ராஜாவின் போஜனத்தைப் புசிக்க மாட்டார்கள், போதை தரும் அவனுடைய மதுவை குடிக்க மாட்டார்கள், அவன் கொடுக்கும் விருந்துகளில் அவர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் தங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாக தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்து கொள்வார்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கு ஏற்றதாயிருந்தது! 57தானியேல் ஒரு தீர்க்கதரிசியாயிருந்ததால், வார்த்தையில் நிலைநிற்பது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. தேவனுடைய வார்த்தையை அறிந்துள்ள உண்மையான தீர்க்கதரிசி எவனும்... அவன் தேவனுடைய வார்த்தையை அறிந்திராமல் போனால், அவன் உண்மையான தீர்க்கதரிசியல்ல, உண்மையான தீர்க்கதரிசி எவனும் வார்த்தையில் நிலைத்திருக்கிறான். வார்த்தை என்ன கூறினாலும் அவன் அதில் உறுதியாய் நிலைத்திருக்கிறான். நாளின் போக்கு எதுவானாலும், நவீன சபை என்ன கூறினாலும், வேறு யார் என்ன கூறினாலும், வேறு யார் என்ன செய்தாலும், உண்மையான தீர்க்கதரிசி வார்த்தையில் உறுதியாய் நிலைத்திருக்கிறான். 58வார்த்தையில் நிலைத்திருந்தால் என்ன நேரிடும் என்பதை தானியேல் அறிந்திருந்தான். அது அவனுடைய கீர்த்தியைப் போக்கிவிடும், மற்ற சகோதரர்களுடன் அவன் கொண்டிருந்த ஐக்கியத்தைப் போக்கிவிடும், வேறு அநேக காரியங்களைப் போக்கிவிடும். ஆனால் அவர்கள் ஒரு பிரச்சினையைக் கிளப்பினர். அதாவது அவர்கள் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை தொழுது கொள்ள வேண்டும், அதன் பிறகு அவர்கள் திரும்பிச் சென்று எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். ஆனால் அதைக் குறித்து உங்களுக்கு சில காரியங்கள் தெரியும். தேவனுடைய விஷயத்தில் நாம் ஒப்புரவாவதில்லை. தேவனிடத்தில் ஒப்புரவாகுதல் என்பது கிடையாது. தேவன் எப்பொழுதும் தேவனாகவே இருக்கிறார். நாம் ஞாயிற்றுக் கிழமையில் கிறிஸ்தவர்களாக இருந்து அவரைத் துதித்து அவரை ஆராதித்துவிட்டு, திங்கட் கிழமையில் நீர்த்தவர்களாகி, எல்லாவிதமான சிந்தனைகளும் நம்மில் புகுந்து, “ஒருவேளை நான் தவறாயிருந்திருக்கலாம், நான் இதை செய்திருக்கக் கூடாது, அதை செய்திருக்கக் கூடாது” என்று நாம் கூறுவோம் என்று அவர் நம்மை எதிர்பார்ப்பதில்லை. நாம் தேவனுடைய வார்த்தையில் மையம் கொண்டிருந்து, அதில் உறுதியாய் இருக்கிறோம். 59எனவே தானியேல், தீர்க்கதரிசி என்னும் முறையில், எதையும் பொருட்படுத்தாமல் வார்த்தையில் நிலைத்திருப்பது அவனுக்கு ஏற்றதாயிருந்தது என்பதை நாம் காண்கிறோம். எனவே, ''அவர்கள் வணங்குவதற்காக தெரிந்து கொண்டிருக்கிற தேவனைத் தவிர வேறெந்த தேவனையும் வணங்கினால்“ என்னும் பிரகடனம் சென்றது. வேறு விதமாகக் கூறினால் ”நீங்கள் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால், உங்களைச் சிங்கங்களின் கெபியில் போடுவோம். தானியேல் வேறு எந்த தெய்வங்களையும் வழிபடாமலும், உலகத்துடன் சிக்கிக் கொள்ளாமலும் தேவனை மாத்திரம் வணங்குவது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. எனவே அவன் கதவுகளை மூடி பலகணிகளைத் திறந்து; கிழக்கு நோக்கி ஒரு நாளில் முன்று தரம் எப்பொழுதும் போல் ஊக்கமாய் ஜெபம் செய்தான். அவன் எங்கோ நழுவிச் சென்று ஒளிந்து கொண்டு ஜெபம் செய்யவில்லை. அவன் பலகணிகளைத் திறந்து காண விரும்புவோர் எவரும் காணத் தக்கதாக ஜெபித்தான். அவன் தன் மார்க்கத்தைக் குறித்து வெட்கப்படவில்லை. 60கிறிஸ்தவன் தன் மார்க்கத்தைக் குறித்து வெட்கப்படாதது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. முன்காலத்து பவுல், “இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்கிறேன்” என்றான். பாருங்கள்? அவன், “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப் படேன். விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவ பெலனாயிருக்கிறது” என்றான். அது உண்மை. சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படாமல் இருத்தல்! கடல் கொந்தளித்து, கப்பல் இங்குமங்கும் ஆடி, நட்சத்திரங்களும் புத்திரர் தங்கள் சொந்த தேசத்திலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்டனர் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர். ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக அவர்கள் அங்கிருந்தனர். சிறை பிடித்துக் கொண்டு போகப்பட்டவர்களில் தானியேல் என்னும் பெயருடைய ஒரு வாலிப தீர்க்கதரிசி இருந்தான். சந்திரனும் கண்ணுக்கு மறைந்து புயல் அடிக்கும் அப்படிப்பட்ட நேரத்தில் அது நம்மைக் காக்கிறது. அது இப்பொழுதும் காத்து வருகிறது, ஏனெனில் அது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம். தானியேல் விசுவாசமுள்ளவனாயிருந்தான், அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. 61எபிரெய பிள்ளைகள் தேவனுக்கென்று நிலையாக நிற்பது அவர்களுக்கு ஏற்றதாயிருந்தது. அவர்கள் எரிகிற அக்கினிச் சூளையைக் குறித்து கவலை கொள்ளவேயில்லை. கடினமான சோதனை நேரத்திலும், அவர்கள் எதைக் குறித்து கவலை கொண்டனர்? அவர்கள் நிலையாக நின்றனர். ஓ தேவனே, இன்றைய கிறிஸ்தவர்கள் மாத்திரம் இதைக் காண முடிந்தால்! “நிந்திக்கப்பட்ட கர்த்தருடைய சிலருடன் என் வழியைத் தெரிந்து கொள்வேன், இயேசுவுடன் நான் தொடங்கிவிட்டேன், ஓ, கர்த்தாவே, என்னை வழிநெடுக கொண்டு செல்லும். சோதனையிலும், தொல்லைகளிலும், மனவேதனையிலும், மரணத்திலும், வியாதியிலும், துயரத்திலும், நான் இயேசு கிறிஸ்துவின் பக்கம் சேர்ந்து கொண்டு நிலையாய் நிற்பேன்”, மற்றெல்லாம் அமிழ்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. ராஜ்யங்கள் விழுந்து போகும், தேசங்கள் உடைந்து போகும், ஸ்தாபனங்கள் சிதறிப் போகும், வேத பண்டிதர்கள் இறந்து போவார்கள், ஆனால் தேவனுடைய வார்த்தையோ என்றென்றைக்கும் மாறாமல் இருக்கும். ஆம், அவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட நிலையில் உறுதியாக நிற்பது அவர்களுக்கு ஏற்றதாயிருந்தது. அவர்கள் ஒரு நிலையை எடுத்துக் கொண்ட பிறகு அதில் நிலைத்திருத்தல் அவர்களுக்கு ஏற்றதாயிருந்தது. 62இன்று காலை நீங்கள் வரும்போது, தேவன் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசித்து, அதில் உறுதியாய் நிலைநின்று, அதற்கு மாறாக எதையும் சாட்சி கூறாதிருப்பது உங்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், நீங்கள் வரவேண்டாம். அது உண்மை. தேவன் உங்களை சுகமாக்குவார் என்னும் உணர்வு உங்களுக்கு இராமல் போனால், நீங்கள் இங்கு வராமல், அங்கேயே தங்கியிருங்கள். இல்லையென்றால் நீங்கள் அதை பரிகாசத்தனமாக செய்துவிடுவீர்கள். இன்று காலை பீட அழைப்பு விடுக்கப்படும்போது, ''கிறிஸ்துவுக்காக உறுதியாய் நிற்க விரும்புகிறேன்'' என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், அதற்காக செலுத்த வேண்டிய கிரயத்தை எண்ணிப் பாருங்கள். போருக்கு உங்களால் செல்ல முடிந்தால், உங்கள் மனிதரை எண்ணிப் பாருங்கள். நீங்கள் ஆயத்தமாயில்லை என்று கருதினால், வராதீர்கள். ஆனால் ஏதோ ஒன்று உங்களிடம், “இது என்னுடைய நாள், இது என்னுடைய காலை” என்று கூறினால், அப்பொழுது நீங்கள் வாருங்கள். அதன் பிறகு அங்கேயே நிலைத்திருங்கள். மரணம் உங்களைச் சந்தித்தாலும், மூடுபனி உங்கள் முகத்தின் மேல் மிதந்தாலும், அங்கிருந்து நகர்ந்து செல்லவே வேண்டாம். அதனால் உங்களுக்கு என்ன கவலை? அங்கேயே நில்லுங்கள்! ஏனெனில், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை'' அதில் நிலைத்திருங்கள். 63நீங்கள், “இயேசு கிறிஸ்து எனக்கு சுகமளிக்கிறவர் என்று நான் விசுவாசிக்கிறேன். இன்று காலை அவர் என் வியாதிப்பட்ட சரீரத்தை சுகப்படுத்தப் போகிறார் என்று விசுவாசிக்கிறேன். ஏதோ ஒன்று என்னை சபைக்குச் செல்லும்படி உரைத்தது. நான் விசுவாசிகளின் மத்தியில் இருக்கிறேன். இன்று காலை நான் உறுதியான நிலையை எடுத்துக் கொள்கிறேன். நான் அதை விசுவாசிக்கிறேன். ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக நான் செல்கிறேன். எனக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்ட பின்பு, நான் எடுத்துக் கொண்ட அந்த நிலையில் நான் உறுதியாய் நிற்பேன். அது எவ்வளவாக அந்தகாரப்பட்டாலும், அது எங்கிருந்தாலும், அந்த நிலையில் நான் உறுதியாய் நிற்பேன்” என்று சொல்லுங்கள். நீங்கள் அந்த நிலையை எடுத்துக் கொள்ளக் காரணம், அது உங்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. நீங்கள் ஒருமுறை அறிக்கை செய்துவிட்ட பிறகு, அந்த அறிக்கையில் நிலைத்திருக்க வேண்டும். அது உண்மை. கிறிஸ்தவன் என்னும் முறையில் விசுவாசி என்னும் முறையில், உங்கள் அறிக்கையில் நிலைத்திருப்பது உங்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. பிசாசு உங்களை இங்கும் அங்கும் தள்ள இடங் கொடாதீர்கள். அதற்கு இடங்கொடுத்தால் நீங்கள் எப்பொழுதும் சேற்றில் புரண்டு கொண்டிருப்பீர்கள். நீங்கள் பிரதான சாலையிலிருந்து எப்பொழுதும் அகன்றிருப்பீர்கள். நீங்கள் எப்பொழுதும் உள்ளேயும் வெளியேயும் இருப்பீர்கள். அவ்விதம் செய்தால் நீங்கள் எங்கேயும் நிலைத்திருக்க முடியாது. உங்கள் பேரிலேயே, உங்களுக்கு நம்பிக்கை இருக்காது. நீங்கள் நிற்க வேண்டும்! நிற்பதற்காக உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகு, நில்லுங்கள் நின்று கொண்டேயிருங்கள். அது உண்மை. அதை நாம் செய்ய வேண்டும். அது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. அதை செய்வது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. 64அது எலியாவுக்கு ஏற்றதாயிருந்தது. தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற ஒரு உறுதியான நிலையை மேற்கொள்வது தீர்க்கதரிசியாகிய எலியாவுக்கு ஏற்றதாயிருந்தது. ஏனெனில் அவன் தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தான். இந்தப் பேராயர் யேசபேலும் அவர்களுடைய ஸ்தாபனங்களின் வேறுபாடுகளும் உலகத்தின் போக்குடன் இணைந்திருந்ததை அவன் அறிந்திருந்தான். எனவே தீர்க்கதரிசி என்னும் முறையில் அவன் நிற்க வேண்டியது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவன் தனிமையில் நின்றான்! அவன், “தேவனே, அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். நான் மாத்திரம் தனிமையில் நிற்கிறேன்” என்றான். அவனுக்கு தெரிந்திருந்தது அவ்வளவுதான். ஆனால் தேவனோ, அதே உறுதியான நிலையில் நிற்கும் இன்னும் சிலர் அவருக்கு இருந்ததாகக் கூறினார்; ஒருக்கால் எலியா இருந்த இடத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் அவன் தேசத்துக்கு இலக்காக இருந்தான். ஆனால் அவனுக்குக் கிடைத்த குறைகூறுதல் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. எல்லோரும் அவனையே தாக்கினார்கள், ஏனெனில் அவன் தீர்க்கதரிசியாயிருந்தான். சோதனையின் மத்தியிலும், குறைகூறுதலின் மத்தியிலும், அலட்சியத்தின் மத்தியிலும், தீர்க்கதரிசி என்னும் முறையில் எலியா தேவனுக்கென்று ஒரு உறுதியான நிலையைக் கடைபிடித்து அதில் நிற்க வேண்டியதாயிருந்தது. எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. அந்த பெரிய, மகத்தான மனிதன் இப்பொழுது எழும்பி வரும் யேசபேல் மார்க்கங்களுக்கும், இன்று நாம் பெற்றுள்ள காரியங்களுக்கும் முன் நிழலாக அமைந்திருக்கிறான். யார் என்ன கூறின போதிலும், என்ன நடந்தாலும், தேவனுடைய ஊழியக்காரன் நிற்க வேண்டியது அவனுக்கு ஏற்றதாயிருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. 65எலியா, தான் தீர்க்கதரிசி என்பதை அறிந்திருந்தான். அவன் தரிசனங்கள் கண்டான். தேவன் அவனை தீர்க்கதரிசி என்று உறுதிப்படுத்தினார். எனவே அவனுடைய சகோதரர்... பல்லாயிரக்கணக்கில் இருந்த அவர்கள் யேகோவாவின் மேல் விசுவாசம் வைத்திருப்பதாக உரிமை கோரினாலும், அவர்கள் தங்களுக்கென ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள், இன்றுள்ளவர்களைப் போல் நவீனமடைந்தனர். அவர்கள் அவருடைய வார்த்தையின் பேரில் ஒப்புரவானார்கள். ஆனால் அல்லேலூயா, எல்லா நீதியையும் நிறைவேற்றுவது எலியாவுக்கு ஏற்றதாயிருந்தது. எனவே அவன் அங்கு தனிமையில் நின்று பொல்லாதவைகளுக்கு விரோதமாக கூச்சலிட்டான். அவர்கள் அவன் உயிரைப் போக்கியிருந்தால், அதனால் என்ன? எல்லா நீதியையும் நிறைவேற்றுவது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. தேசத்தில் பொல்லாங்கு காணப்பட்டது. தேசத்தில் அலட்சியம் காணப்பட்டது. தேசத்தில் வேதப் பிரகாரமான தவறுகள் காணப்பட்டன. எல்லா நீதியையும் நிறைவேற்றி யேகோவாவுக்காக நிற்பது எலியாவுக்கு ஏற்றதாயிருந்தது. யேகோவாவும் எலியாவுக்காக நின்றார் ஆமென். 66ஆபிரகாம், அவிசுவாசத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்வது ஆபிரகாமுக்கு ஏற்றதாயிருந்தது. அவிசுவாசத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்வது எந்த ஒரு விசுவாசிக்கும் ஏற்றதாயிருக்கிறது. ஆபிரகாமுக்கு தன்னுடைய சொந்த தேசத்தில், அவனும் தேவனும் மாத்திரம் நடப்பது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. ஏனெனில் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். ஆபிரகாம் அத்தகைய ஒன்றை ஏன் தெரிந்து கொண்டான் என்று உலகத்துக்குப் புரியவில்லை. அவன் ஏன் தன் வீட்டை விட்டு வந்தான்? அவன் ஏன் தன் சபையை விட்டு வந்தான்? அவன் ஏன் தன் ஜனங்களை விட்டு வந்தான்? அவன் உணவும் தண்ணீரும் கிடைக்காத அந்நிய தேசத்தில் சஞ்சரிக்கும் யோசனையற்ற செயலை ஏன் புரிந்தான்? இதுவரை மனிதர் சென்றிடாத இருண்ட வனாந்தரங்களுக்கு அவன் ஏன் செல்ல வேண்டும்? ஆனால் அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது, ஏனெனில் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் தன்னை சகல அவிசுவாசத்தினின்றும் பிரித்துக் கொண்டு, தேவனுடன் தனிமையில் நடந்தான், தேவன், “உன்னைப் பிரித்துக் கொள், அப்பொழுது நான் உன்னை ஆசீர்வதிப்பேன்”, என்றார். 67நீங்கள் சகல அவிசுவாசத்தினின்றும் உங்களைப் பிரித்துக் கொள்ளும் போது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அதற்காக செலுத்தப்பட வேண்டிய கிரயம் என்னவாயிருந்தாலும், அவிசுவாசிக்கும் உலகத்திலிருந்து நம்மைப் பிரித்துக் கொள்வது நம் ஒவ்வொருவருக்கும் ஏற்றதாயிருக்கிறது. “அவர்களை விட்டுப் பிரிந்து வாருங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்”, என்று தேவன் கூறியுள்ளார். தேவனுடைய மனிதரும் ஸ்திரீகளும் என்னும் முறையில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இருண்ட நேரத்தில், நமது உறுதியான நிலையைக் கடைபிடிப்பது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. 68ஆபிரகாம், மற்றவர்கள் என்ன நினைத்த போதிலும், தன்னைப் பிரித்துக் கொண்டான். ஏன்? அவன் தேவனைக் கண்டான். அவன் ஒரு தரிசனம் கண்டான், அது உண்மையான தரிசனம், அந்த தரிசனம் நிறைவேறினது. தேவன் அவனோடு கூட இருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆபிரகாம் அப்படிப்பட்ட ஒரு யோசனையற்ற அறிவிப்பைச் செய்வதென்பது! அவன் நூறு வயதான மனிதன், அவனுடைய மனைவிக்கு தொண்ணூறு வயது. அவளுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. அவள் மலடியாயிருந்தாள். அவன் ஆண்மை இழந்திருந்தான். அந்த விருத்தாப்பிய வயதில் அவர்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பது, அக்காலத்து மருத்துவ விஞ்ஞானம் அவனை ஒரு விதமான ஒழுங்கற்றவன் (erratic) என்று அழைத்திருக்கும். அவர்கள் அவனைப் பைத்தியக்காரன் என்று அழைத்திருப்பார்கள். ஆனால் அது ஏற்றதாயிருந்தது. அல்லேலூயா! 69அது வார்த்தையின் படிஇருந்தால், சில சமயங்களில் ஒழுங்கற்றவர்களாக ஆவது ஏற்றதாயிருக்கிறது. தேவன் அவனை, “ஆபிரகாமே” என்றார். அவன், “இதோ, கர்த்தாவே” என்றான். “நான் உன் பிதாக்களின் தேவன். நான் நித்தியத்துக்கு தேவன். நான் எல்ஷடாய்; நான் மார்பு, நான் மார்பகம். நான் பெலன் அளிக்கிறவர், ஆபிரகாமே, உனக்கு எவ்வளவு வயதானாலும் எனக்குக் கவலையில்லை, அதனால் எனக்கு என்ன - நீ ஆண்மையை எவ்வளவாக இழந்திருந்தாலும் அவளுடைய கர்ப்பம் எவ்வளவு மலடாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, உனக்கு நான் ஒரு குமாரனைக் கொடுப்பேன்”. ஆபிரகாம், “தேவனே, உம்மை நான் விசுவாசிக்கிறேன்” என்றான். அல்லேலூயா! “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான்” என்று வேதம் உரைக்கிறது. ஏன்? அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவன் தேவனுடைய கரம் வல்லமையோடு அசைவதைக் கண்டான். 70ஓ, பிரான்ஹாம் கூடாரமே, நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் எந்த விதமான வார்த்தையை சொல்லப் போகிறோம்? அவருடைய மகத்தான கரத்தை நாம் கண்டிருக்கிறோம். அவருடைய வல்லமையை நாம் கண்டிருக்கிறோம். அவருடைய மகிமையை நாம் கவனித்து வந்திருக்கிறோம். அவர் என்ன உரைத்திருக்கிறார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். அது ஒருபோதும் தவறினதேயில்லை. அவருடைய தோற்றத்தை, அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பத்தை, இந்த அறையில் ஒரு ஒளியாக தொங்குவதை நாம் கண்டிருக்கிறோம். அதை நாம் வெளியிலும் கண்டிருக்கிறோம். விஞ்ஞானம் அதைப் புகைப்படம் எடுத்துள்ளது. இங்கிருந்து செய்தி வரிசைக் கிரமமாக சென்று, “அவர்களை விட்டுப் பிரிந்து வாருங்கள், எவ்வித அவிசுவாசத்துடனும் உங்களை சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்”, என்று கூறுவதைக் கேளுங்கள். எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. 71ஆபிரகாம், தான் அந்நியனும் சஞ்சாரியுமாயிருந்தான் என்று அறிக்கையிட்டான். அவனுக்கு உலகத்துடன் யாதொரு தொடர்பும் இருக்கவில்லை. அவன் இவ்வுலகில் யாரையும் அறிந்திருக்கவில்லை. அவன் தேவனுடன் நடந்தான், ஏனெனில் அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது, ஏனெனில் அவன் அவரைக் கண்டிருந்தான். அது ஆபிரகாமுக்கு ஏற்றதாயிருந்தது. அந்த ராஜாக்கள் அனைவரும் அவனைச் சந்தித்து அவனை ஒரு பெரிய மனிதனாக ஆக்க வேண்டும் என்று எண்ணின் போது; ஆபிரகாம் அந்த பெரிய வெற்றியை அடைந்த பின்பு, அந்த ராஜாக்கள், அந்த ஸ்தாபன சகோதரர்கள், அவனைச் சந்தித்து, ''ஆபிரகாமே, உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறோம். நாங்கள் இன்னின்னதை செய்யப் போகிறோம்“ என்றனர். அவனோ, “ஆபிரகாமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு, நான் ஒரு பாதரட்சையின் வாரையும் கூட உம்மிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளேன்” என்றான். ஓ, அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது, ஏனெனில் தேவன், “நீ கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் நோக்கிப் பார்க்கும் இடமெல்லாம் உனக்குத் தருவேன்'' என்று அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார் என்பதை அவன் அறிந்திருந்தான் (அல்லேலூயா!) 72நமக்கு ஒரு காசு இருந்தாலும் இல்லாமற் போனாலும், நமக்கு உண்ண உணவு இருந்தாலும் இல்லாமற் போனாலும், நாம் உயிரோடிருந்தாலும் அல்லது மரித்துக் கொண்டிருந்தாலும், அதனால் என்ன வித்தியாசம்? “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்” என்று தேவன் வாக்களித்துள்ளார். எனவே எல்லா நீதியையும் நிறைவேற்ற, அதைப் போல் வாழ, அதைப் போல் நடந்து கொள்ள நமக்கு ஏற்றதாயிருக்கிறது. தேவனுக்கு, உறுதியாய் நின்று எல்லா நீதியையும் நிறைவேற்றும் மனிதரும் ஸ்திரீகளும் தேவை. நீதி என்பது “அவருடைய வார்த்தை”. 73இந்த பிரசங்கத்தின் தொடக்கத்தில் நான் கூறினது போல், அதன் காரணமாகவே இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அது எப்படியிருந்த போதிலும்... அவர் தேவனுடைய குமாரன் என்று உரிமை கோரின போது, பின்னை ஏன் பாவ மன்னிப்புக்கேற்ற ஞானஸ்நானம் பெற வேண்டும்? அவர் ஞானஸ்நானம் பெற்றார். அவர் பிரதான ஆசாரியனாயிருந்தபடியால் கழுவப்பட வேண்டும். அவர் எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டும். அவர், “யோவானே, அதற்கு இடங்கொடு, அது உனக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும். அது எனக்கும் தெரியும். நாம் ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். ஆனாலும் இப்பொழுது நாம் இடங் கொடுப்போம். இப்படி செய்வது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்றார். ஆமென்! அல்லேலூயா! அப்படியானால், நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலருடன் என் வழியைத் தெரிந்து கொள்வேன். தேவனுடைய ஊழியக்காரர் என்னும் முறையில் நிந்திக்கப்படும் கர்த்தருடைய சிலருடன் நமது வழியைத் தெரிந்து கொண்டு, தேவ பக்தியுள்ளவர்களாய், நீதிமான்களாய், பரிசுத்தமுள்ளவர்களாய் தற்போதைய வாழ்க்கையில் வாழ்ந்து, நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கிற பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவை நோக்குவது எனக்கும் உங்களுக்கும் ஏற்றதாயிருக்கிறது. ஆமென். 74ஆபிரகாம் அங்கு நடந்து சென்றபோது, அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. தேவன் அவனிடம், “இப்பொழுது இந்த சிறுவனை உன்னுடன் கொண்டு போ. இப்பொழுது உனக்கு ஏறக்குறைய நூற்றிருபது வயதாகிறது. உனக்கு சுருட்டை தலைமயிருள்ள ஒரு மகன் இங்கிருக்கிறான். அவன் அழகான சிறுவன். ஆனால் அவனை நீ மலையின் மேல் கொண்டு போய் பலி செலுத்த வேண்டும். அவன் மூலம் அநேக ஜாதிகளைத் தோன்றப் பண்ணுவேன்” என்றார். அது எப்படி முடியும்? தேவனுக்கு குழப்பம் உண்டாகிவிட்டது போல் தோன்றுகிறது. “ஈசாக்கை நான் தெரிந்து கொண்டு, அவன் மூலம் முழு உலகத்தையும், எல்லா தேசங்களையும் ஆசீர்வதிப்பேன். ஆனால் இப்பொழுது அவனை மலையின் மேல் கொண்டு போய் பலியிட வேண்டும். ஈசாக்கின் சந்ததியின் மூலம்...” அல்லேலூயா! ''ஈசாக்கின் சந்ததியின் மூலம் வானத்தின் கீழுள்ள எல்லா தேசங்களையும் ஆசீர்வதிப்பேன். ஆனால் இப்பொழுது அவனை மேலே கொண்டு போய் பலியிட வேண்டும்“. 75ஓ, அந்த இரக்கமற்ற, திடகாத்திரமுள்ள வயோதிப தகப்பன்; கழுதையின் முதுகில் கட்டைகள் நிறைந்த சாக்கை ஏற்றி அதை நடத்திக் கொண்டு போகிறான். என்னே! சிறுவன் ஈசாக்கு அவனுக்கு முன்னே நடந்து செல்கிறான். அவன், “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படவில்லை” அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. ஆபிரகாமோ, “அவனை மரித்தோரிலிருந்து பாவனையாகத் திரும்பப் பெற்றுக் கொண்டேன். தேவன் அவனை மரித்தோரிலிருந்தும் எழுப்ப வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்புகிறேன்'', என்று கூறினான். ஆமென்! எல்லா நீதியையும் நிறைவேற்றுவது ஆபிரகாமுக்கு ஏற்றதாயிருந்தது. அவன் எதைக் குறித்துப் பேசுகிறான் என்பதை அறிந்திருந்தான். அவனுடைய தேவனை அவன் அறிந்திருந்தான். தேவன் உரைத்ததை நிறைவேற்ற வல்லவாயிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். தேவன் வாக்களித்துள்ளதை எந்த சூழ்நிலையிலும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். எனவே எல்லா நீதியையும் நிறைவேற்றுவது ஆபிரகாமுக்கு ஏற்றதாயிருந்தது. 76பெந்தெகொஸ்தே நாளில் மேலறைக்குப் போவது சீஷர்களுக்கு ஏற்றதாயிருந்தது. ஏன்? அது ஏன் ஏற்றதாயிருந்தது? ஏனெனில் அவர்கள் ஒரு மனிதனை சந்தித்தனர்; ஒரு தச்சன். உலகத்துக்கு கலிலேய அந்நியன் என்று அறியப்பட்டவர், ''முறை தவறிப் பிறந்தவர்“ என்னும் மோசமான பெயரைக் கொண்டிருந்தவர். ஆனால் அந்த மனிதன் மரித்தோரை உயிரோடெழுப்பினதை அவர்கள் கண்டனர். அந்த மனிதன் குருடரின் கண்களைத் திறப்பதை அவர்கள் கண்டனர். அந்த மனிதன் கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதை அவர்கள் கேட்டனர். அவர் மேசியா என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவரைச் சுற்றிலும் எல்லா அடையாளங்களையும் அவர் கண்டனர். வானத்திலிருந்து தேவன் பதிலுரைப்பதை அவர்கள் கேட்டனர். அவர் மேல் அக்கினி ஸ்தம்பம் தொங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அவர் மேசியா என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர், ''நான் போவது உங்களுக்கு நலமாயிருக்கும். நீங்கள் எருசலேமுக்குச் சென்று அங்கு தங்கியிருங்கள், அங்கு காத்திருங்கள்” என்றார். “எத்தனை நாட்கள்?”, “அது வரைக்கும்”, “கர்த்தாவே, அது எத்தனை நாட்கள் செல்லும்?” “அது வரைக்கும். உன்னதத்திலிருந்து வரும் வல்லமையினால் நீங்கள் தரிப்பிக்கப்படும் வரைக்கும். அதன்பிறகு நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்”. “கர்த்தாவே, அது எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?” “இந்த சந்ததிக்கும், அந்த சந்ததிக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் அழைக்கும் யாவருக்கும். எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும். ஆனால் நீங்கள் போவதற்கு முன்பு காத்திருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒன்றைச் செய்யப் போகிறேன்.” 77அவர்கள் மேலறைக்குச் செல்வது அவர்களுக்கு ஏற்றதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் அவருடைய வல்லமையைக் கண்டனர். அவர் மரித்தார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர் மரித்தபோது, அவருடைய மரணத்தைக் குறித்து சந்திரனும் நட்சத்திரங்களும் கூட சாட்சி பகர்ந்தன. அவைகள் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு பிரகாசிக்க மறுத்தன. அவர் மரித்தார் என்று பூமி அறிந்து கொண்டது, அது பயத்தினால் நடுநடுங்கி குலுங்கினது. ஜலப்பிரளய அழிவுக்கு முன்பு இருந்த கற்பாறைகள் பூமியை விட்டு வெளியே வந்து விழுந்தன. அவர் மேசியா என்று அவை அறிந்திருந்தன. அவர் மறுபடியும் பரிசுத்த ஆவியை அனுப்பப் போவதாக அவருடைய வார்த்தை உரைத்திருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது ஒரு வாக்குத்தத்தம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அதற்காக அவர்கள் அங்கு காத்திருக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர். அவர்கள் அவரைக் கண்டிருந்தனர். அவர் மரித்தார் என்றும் அவர் உயிரோடு எழுந்துவிட்டார் என்றும் அறிந்திருந்தனர். அவர் உயிரோடெழுந்த பின்பு அவரைக் கண்டனர். எனவே தாங்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறிந்திருந்தனர். ஒரு மனிதன், தான் என்ன பேசுகிறான் என்பதை அறிந்திருந்தாலன்றி, அவனால் அதிகம் ஒன்றும் கூற முடியாது, ஆனால் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று அறிந்திருப்பீர்களானால்! இது உணர்ச்சிவசப்படுதல் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வந்து அதை ஒருமுறை பெறுங்கள், அப்பொழுது நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். அது உணர்ச்சிவசப்படுதல் அல்ல. அது இரட்சிப்பு உண்டாவதற்கு தேவ பெலன். அது பரிசுத்த ஆவி, அவரைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும், அவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறிந்திருக்கின்றனர். 78எருசலேமில் காத்திருக்க வேண்டும் என்னும் அவருடைய வார்த்தையைக் கைக் கொள்வது சீஷர்களுக்கு ஏற்றதாயிருந்தது. எனவே அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் மேலறைக்குச் சென்று பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் அங்கு காத்திருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று அவரைக் குறித்து சாட்சி கொடுத்தாலொழிய அவர்கள் ஊழியம் தொடர்ந்து நடக்காது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் உதவியற்ற நிலையில் உள்ளனர் என்பதை அறிந்திருந்தனர். அவர்களுக்கு அவருடைய சமூகம் தேவையாயிருந்தது. எனவே அவர்கள் சென்று அதற்காக காத்திருந்தனர். இயேசு பேதுருவைச் சந்தித்த பிறகு, அது அவனுக்கு ஏற்றதா யிருந்தது. ''நீங்கள் உலகமெங்கும் போய் சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று மாற்கு 16 உரைக்கிறது. 79மீன் பிடிப்பவனாகிய பரி. பேதுருவுக்கு இது ஏற்றதாயிருந்தது. தன் பெயரைக் கையொப்பமிடுவதற்கும் அவனுக்குப் போதிய கல்வியறிவு இல்லை. ஒரு நாள் அவன் சாலொமோன் கட்டின அலங்கார வாசலின் வழியாய் பிரவேசிக்கையில், சப்பாணி ஒருவன் அங்கு கிடந்திருந்தான். அவனுடைய முழங்கால்கள், கணுக்கால்கள் பெலவீனமாயிருந்தன. அவனால் நடக்க முடியவில்லை. அவன் அவ்விதமாய் பிறந்திருந்தான். அவனுக்குப் பெலன் இல்லை. ஏறக்குறைய நாற்பது வயதுள்ள மனிதன், அவனுக்குப் பெலன் இல்லை. கோப்பை காசுகளால் குலுங்கும் சத்தத்தை பேதுரு கேட்டு பார்த்த போது, அங்கு சப்பாணியான ஒரு மனிதன் கிடக்கிறதைக் கண்டான். ஏதோ ஒன்று அவனுடைய இருதயத்தை அடித்து நொறுக்கினதை போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது! அவன் பெந்தெகொஸ்தே நாளில் மேலறையில் இருந்தான், அவனுக்குள் பரிசுத்த ஆவி இருந்தது. அவன் இயேசுவின் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தான். எனவே ''வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை“ என்று சொல்வது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவன் தன் சாட்சியை அறிவித்தான், ''வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்.” அந்த மனிதன், “அதை நான் பெற்றுக் கொள்கிறேன்” என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அவன், “நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எழுந்து நட” என்று சொல்லி, கீழே குனிந்து அவனில் விசுவாசத்தை உண்டாக்க, அவனைப் பிடித்து இப்படி தூக்கிவிட்டான். அப்பொழுது அவன் கால்களும் கரடுகளும் பெலன் கொண்டன. அவன் நடந்து, குதித்து, தேவனைத் துதித்து மகிமைப்படுத்தினான். 80அப்படி செய்வது பேதுருவுக்கு ஏற்றதாயிருந்தது. அவன் அதை செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு சீஷன். அவன் இயேசுவுடன் கூட இருந்தான். அதை முழு உலகமும் அறிந்து கொண்டது. முந்தின நாள் சனகரீம் சங்கத்திற்கு அவர்கள் அவனையும் யோவானையும் கொண்டு வந்த போது, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும், அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்றும் அறிந்து கொண்டார்கள். ஏனெனில் அவர்கள் பேசுகிற தைரியத்தை அவர்கள் கேட்டனர். அவர்களுக்கு ஏதோ ஒன்று சம்பவித்ததென்று அவர்கள் கண்டு கொண்டனர். பேதுரு அதை அறிந்திருந்தான். எனவே, அந்த நாளுக்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தை பேதுரு உடையவனாயிருந்ததால், அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. ''நான் உங்களுக்கு வல்லமையைத் தருவேன். நான் உங்களுக்கு வல்லமையைத் தருவேன். நீங்கள் சர்ப்பத்தின் தலைகளையும் தோள்களையும் மிதிப்பீர்கள். என் நாமத்தில் நீங்கள் எதைக் கேட்டாலும், அதை நான் செய்வேன். இந்த மலையைப் பார்த்து “தள்ளுண்டு போ” என்று சொல்லி, நீ சொன்னபடியே நடக்கும் என்று உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், நீ சொன்னபடியே ஆகும்.“ பேதுருவிற்கு அதை விசுவாசிக்கும்படி அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவனுக்கு அது ஏற்றதாயிருந்தது. அவன் அந்தக் கட்டளையின் நாளில் ஜீவித்ததால் அவன் செய்ய வேண்டியதும் அதுவே. அதுதான் அந்த மணி நேரத்தின் வெளிச்சம். உயிர்த்தெழுதல் சற்று முன்பு சம்பவித்திருந்தது. பரிசுத்த ஆவி அங்கே இருந்தார். அது அவனுக்கு ஏற்றதாயிருந்தது... 81அது பரி. பவுலுக்கு ஏற்றதாயிருந்தது; அவன் குற்றம் கண்டு பிடிக்கிறவனாக இருந்த பிறகு, ஒரு நாள் அவன் தமஸ்குவுக்குப் போகும் வழியில், இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்கு வழிநடத்தி, மாம்சமாகி அவர்கள் மத்தியில் வாசம் செய்து, மறுபடியும் தேவனிடத்திற்குத் திரும்பின அந்த அக்கினி ஸ்தம்பம் அவனிடம் பேசினது. அவன், “இது எப்படி யேகோவாவாக இருக்க முடியும்? இது எப்படி இருக்க முடியும்? இதோ அவர் அதே அக்கினி ஸ்தம்பமாக அங்கு தொங்கிக் கொண்டிருக்கிறாரே'' என்று வியந்தான். அவன், ”ஆண்டவரே, நான் துன்பப்படுத்தும் நீர் யார்?“ என்றான். அவர், “நான் இயேசு” என்றார். ஓ, என்னே! அவனுக்குக் கட்டளை கொடுத்து, அவனுடைய ஊழியத்தை அவனுக்கு அளித்தார். அவர் பவுலுக்குக் கட்டளை கொடுத்து, அவனுடைய ஊழியத்தை அவனுக்கு அளித்தார். பவுல் தேவனுடைய சமுகத்தில் இருந்திருக்கிறான். அவன் அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டிருக்கிறான். ஒரு காலத்தில் அக்கினி ஸ்தம்பமாயிருந்து, அதன்பிறகு மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணி, அக்கினி ஸ்தம்பமாக திரும்பச் சென்று அவனுடைய ஊழியத்துக்கான கட்டளை கொடுத்த அந்த இயேசுவை அவன் கண்டிருக்கிறான். அல்லேலூயா! ஒன்றுமே அவனை அசைக்க முடியாது. அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களை எடுத்து வியாதிக்காரருக்கு அவர்கள் அனுப்பினது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. ஏனெனில் அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட அப்போஸ்தலன் என்பதை அறிந்திருந்தான். அவன் தேவனுடைய தரிசனங்களைக் கண்டான். தேவன் அவனுக்கு முன்பாகப் பிரத்தியட்சமாகி அவனிடம் உரைத்தது. அப்படியே நிறைவேறினது. பவுல் ஜனங்களுக்கு உதவி செய்து, அவன் ஊழியத்துக்காக பெற்றிருந்த கட்டளையை நிறைவேற்றுவது அவனுக்கு ஏற்றதாயிருந்தது. அவன் அந்நாளின் ஒளியாயிருந்தான். அவன் புறஜாதிகளுக்கு ஒளியாயிருந்தான். அவன் அதை அறிந்திருந்தான். அவ்விதம் இருக்க தேவன் அவனுக்கு ஊழியத்தைக் கொடுத்திருந்தார். அவன் அந்நாளின் ஒளியாயிருந்தான். அவ்விதம் இருக்க தேவன் பவுலுக்கு ஊழியத்தைக் கொடுத்திருந்தார். 82இப்பொழுது நமக்கு இந்த நாளில் அது ஏற்றதாயிருக்கிறது. நமக்குத் தெரியும். சற்று முன்பு தான் நாம் சபை காலங்களைக் குறித்து சிந்தித்தோம். நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். அதை நாம் எவ்வித சந்தேகமுமின்றி அறிந்திருக்கிறோம். நம்மிடம் சுவிசேஷ ஒளி உள்ளதென்று நாம் அறிந்திருக்கிறோம். ''நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். உலகிலுள்ள எந்த குருவானவரும், வேறு யாருமே, இதை எதிர்க்க முடியாது. எவ்வளவு தூரம் இது செய்யப்பட வேண்டும்? “வாக்குத்தத்தமானது உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது.” 83“சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், இந்த சுவிசேஷ ஒளி திரும்பவும் வரும்” என்று தீர்க்கதரிசி உரைத்திருக்கிறான். கிழக்கில் உதிக்கும் அதே சூரியன் மேற்கில் மறைவது போல, அது கடைசி நாட்களில் திரும்பவும் வரும். நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோம். அதை நாம் அறிந்திருக்கிறோம். அவர்கள் பெந்தெகொஸ்தேயில் செய்தது போல நாம் பாஷைகள் பேசியிருக்கிறோம். அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஏழாம் தூதன் செய்தியை அளித்துவிட்டான் என்று நாம் அறிந்திருக்கிறோம். அது அடையாளத்தினால் உறுதிப்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். நாம் லவோதிக்கேயா சபையின் முடிவில் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். தேசங்களுக்கிடையே யுத்தம், அற்புதங்கள், அடையாளங்கள் எல்லாவிடங்களிலும் காணப்படுகின்றன என்று நாமறிவோம். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். தேவனே சாட்சியாயிருக்கிறார்! எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. ''ராஜ்யத்துக்கு விரோதமாக ராஜ்யம், உபத்திரவம், சோர்ந்து போதல். இவைகளையெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடுமானால். 84இப்பொழுது நாம் முடிவு நேரத்தில் இருக்கிறோம். நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு தூதனும் தன் காலத்தில் தன் செய்தியை அளித்துவிட்டான். இப்பொழுது நாம் காலத்தின் முடிவில் இருக்கிறோம், தேவன் இதை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், உறுதிப்படுத்தி வருவதை நாம் காண்கிறோம். அப்படியல்ல என்று யாருமே சொல்ல முடியாது. அவர் இப்பொழுது இங்கிருக்கிறார். அவர் சபையில் இருக்கிறார்! அவர் ஜனங்களுக்குள் இருக்கிறார்! அப்படியல்ல என்று யாருமே சொல்ல முடியாது. அவர் இங்கிருக்கிறார் என்று நமக்குத் தெரியும். அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. எல்லா நீதியையும் விசுவாசிப்பது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. அது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. அவர் உரைத்துள்ள ஒவ்வொன்றையும் நாம் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. 85சபை பெலவீனமடைந்துவிட்டது, இன்றைய சபைகள். நாம் ஸ்தாபனங்களுக் கிடையே உள்ள சண்டையினால் பிளவுபட்டு, சகோதரத்துவத்தில் பிரிவினை ஏற்பட்டுள்ளது மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், ஒருத்துவம், திரித்துவம் போன்ற எல்லா விதமான காரியங்கள், நாம் பிளவுபட்டிருக்கிறோம். அது அவ்விதமாகவே இருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு செய்தி வரும்! ஓ, அல்லேலூயா! அது இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பம் என்று நமக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவை அபிஷேகம் செய்த அதே அக்கினி ஸ்தம்பம்; அதன் மூலம் அவரைத் தொடர்ந்த அதே ஊழியம் இன்றைய சபையையும் தொடர்கிறது. விஞ்ஞானம் அதை நிரூபித்துள்ளது; அது நமக்குத் தேவையில்லை. தேவன் அதை நிரூபித்திருக்கிறார். மேலேயிருந்து வரும் அந்த தலைக் கல்லை பொருத்த இயேசு கிறிஸ்துவின் ஊழியம் நமக்குத் தேவையாயுள்ளது. இயேசு கிறிஸ்து சென்றபோது, காணப்பட்ட அதே போன்ற ஊழியம் சபையை இந்த ஸ்தானத்துக்கு கொண்டு வந்துள்ளது. முற்றிலுமாக! நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழுகிறது இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம் புறஜாதிகள் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, திகில் எங்கும் சூழ்ந்துள்ளது “ஓ, சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்துக்குத் திரும்புங்கள்.” 86நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. “லோத்தின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வருகையிலும் நடக்கும்” என்று இயேசு கூறினார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எத்தனை பேருக்கு அது ஞாபகம் உள்ளது? (சபையோர் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி) சரி, லோத்தின் நாட்களில் என்ன நடந்தது? அவர் என்ன அடையாளத்தைக் கொடுத்தார்? லோத்தின் நாட்களில் மூவகை ஜனங்கள் இருந்தனர். அது சரியா? (சபையோர் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி). அங்கு அவிசுவாசி, பாவனை விசுவாசி, விசுவாசி இருந்தனர். ஒவ்வொருவரும் ஒரு தூதனை ஏற்றுக் கொண்டனர். அது உண்மை. ஆபிரகாம் கர்வாலி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தபோது, என்ன நடந்தது? என்ன நடந்ததென்று பாருங்கள். ஒரு தூதன் இறங்கி வந்து சோதோமுக்குப் போனார். இந்த மனிதன் அங்கு சென்று மனந்திரும்புதலைப் போதித்தார். என்ன நடந்தது. மூன்று பேர் மாத்திரமே வெளியே வந்தனர், லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும். லோத்தின் மனைவி உப்புத் தூணாக மாறினாள். நவீன பில்லி கிரகாமைப் போன்ற ஒருவர் அவர்களுக்கு அங்கே செய்தியை அளித்த போது, மூன்று பேர் மாத்திரமே வெளியே வந்தனர். அது மறுபடியும் இன்று சம்பவிப்பதை நாம் காண்கிறோம். பெயர் கிறிஸ்தவ சபைக்கு ஒரு தூதன் சென்று பிரசங்கிப்பதை நாம் காண்கிறோம். 87ஆபிரகாமிடமும் தெரிந்து கொள்ளப்பட்ட சபையிடமும் ஒருவர் வந்தார். அவர் அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அது உண்மையென்று நமக்குத் தெரியும். அவர் தமது முதுகை கூடாரப் பக்கம் திருப்பி உட்கார்ந்து, சாராள் யாரென்றும், அவளுடைய இருதயத்தில் என்ன இருந்ததென்றும், அவளுடைய தொல்லை என்னவென்றும் கூறினார். அவர் செய்தியை அப்படியே அளித்தார். அவர் தேவன் என்று ஆபிரகாம் அறிந்திருந்தான். ஏனெனில் அவர் அவ்விதம் கூறினவுடனே, அவன் அவரை “ஏலோகிம்” என்றழைத்தான். இவர் சோதோம் கொமோராவுக்கு ஒரு செய்தியை அளிக்க மனித சரீரத்தில் உருவான ஒரு தூதன். இயேசு நிறைவேறும் என்று சொன்ன காரியங்களை இன்று நாம் காணும்போது, எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. தேவன் உரைத்த வார்த்தையை ஏற்றுக் கொள்வது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). இப்பொழுது இடங்கொடு. 88“சகோ. பிரன்ஹாமே, நீங்கள் மற்ற ஸ்தாபனங்களுடன் ஒத்துப் போகாமல் இருக்கிறீர்களே.” அது ஒருவேளை அவ்விதம் இருக்கலாம். அது அவ்விதம் இருப்பதற்கு இப்பொழுது இடங்கொடு. அது உண்மை. இதற்கு இடங்கொடு. ''நல்லது, நீங்கள் அவர்களுடன் ஒத்துழைத்தால் மிகவும் நன்றாயிருக்கும்.“ அது அவ்விதம் இருக்க இப்பொழுது இடங்கொடு. இப்படி இருப்பது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. நாம் அவருடைய ஜனங்கள், அவருடைய தீர்க்கதரிசிகள், அவருடைய துறவிகள் (sages). எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. எனவே நாம் அதை செய்வோம். இப்பொழுது நாம் தலை வணங்குவோம். நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழுகிறது இவை வேதாகமம் முன்னுரைத்த அடையாளங்களாம் புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, திகில் எங்கும் சூழ்ந்துள்ளது. “ஓ, சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள்.” மீட்பின் நாள் சமீபமாயுள்ளது. மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன ஆவியினால் நிறைந்து, உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி நிமிர்ந்து நோக்குங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் இயேசு கிறிஸ்துவே நமது தேவன் என்னும் தேவனுடைய சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர். (அது எவ்வளவு உண்மை; ஓ, நூற்றுக்கணக்கானோர்) நாமோ அப்போஸ்தலர் சென்ற பாதையில் நடப்போம் ஏனெனில் மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன ஆவியினால் நிறைந்து, உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி நிமிர்ந்து நோக்குங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. 89நீங்கள் தலை வணங்கியிருக்கும் இந்நேரத்தில் இக்காலை வேளையில் உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பது உங்களுக்கு ஏற்றதாயிருக்கிறதா? அவர் உங்களிடம் பேசினாரா? அப்படியானால், அவரிடத்தில் உங்கள் கைகளையுயர்த்தி, “இப்பொழுது நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறேன். எனக்குள்ள எல்லாவற்றையும், என் சித்தத்தையும், இன்று காலை அவருக்கு ஒப்புவிப்பது எனக்கு ஏற்றதாயிருக்கிறது. இப்பொழுது என் கையையுயர்த்தி, 'கர்த்தராகிய இயேசுவே, என் மேல் கிருபையாயிரும்' என்று சொல்லுகிறேன். எனக்கு நீர் தேவை, ஓ, நீர் எவ்வளவாக எனக்குத் தேவை! ஒவ்வொரு மணி நேரமும் நீர் எனக்குத் தேவை'', என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ”ஓ, ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரே, நான் உம்மிடம் வருகிறேன். எனக்கு நீர் தேவை, ஓ, எனக்கு நீர் தேவை. (இப்பொழுது தாயார் கிடக்கும் இடத்தில் நீங்கள் கிடந்தால் எப்படியாயிருக்கும்?) ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு நீர் தேவை! ஓ. என் இரட்சகரே, இப்பொழுது என்னை ஆசீர்வதியும் நான் உம்மிடம் வருகிறேன்! எனக்கு நீர் தேவை, ஓ கர்த்தாவே, எங்களுக்கு நீர் தேவை ஒவ்வொரு மணிநேரமும் எனக்கு நீர் தேவை! ஓ, இப்பொழுது என்னை ஆசீர்வதியும் (கர்த்தாவே, நீண்ட நாட்களாக இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது நீர் அதிகம் தேவை) நான் உம்மிடம் வருகிறேன்! (சகோ. பிரன்ஹாம் ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு நீர் தேவை என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி.) 90பரலோகப் பிதாவே, “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” என்று நீர் வாக்களித்திருக்கிறீர் என்பதை அறிந்தவர்களாய், நாங்கள் பள்ளத்தாக்குகளின் வழியாக நடந்து செல்கிறோம். கர்த்தாவே, தங்கள் ஆத்துமாவில் சரியாயிராத யாராகிலும் இங்கிருப்பார்களானால், இப்பொழுது என் தாயார் அடைந்துள்ள பாதையின் முடிவை அவர்கள் அடையும் போது, ஓ, கர்த்தாவே, அவர்களும் தங்கள் சாட்சியைப் பெற்றிருப்பார்களாக. கர்த்தாவே, இன்றைக்கு அது எங்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. நாங்கள் பாதையின் முடிவில் இருக்கிறோம், லவோதிக்கேயா சபை; ஒரு செய்தி; செய்தி புறக்கணிக்கப்படுதல்; செய்தி உறுதிப்படுதல். கிறிஸ்துவின் பிரசன்னம் இருந்து கொண்டு, அவர் நேற்றைய லோத்தின் நாட்களில், அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், இன்றைய நாட்களில் மாறாதவர் என்பதை நிரூபிக்கிறது; நேற்றும், இன்றும், என்றும். இப்பொழுது இவர்கள் உம்மை தங்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகராக ஏற்றுக் கொள்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். 91ஓ, என் இரட்சகரே, இப்பொழுதே என்னை ஆசீர்வதியும் நான் உம்மிடம் வருகிறேன். மிகவும் விலையேறப்பெற்ற கர்த்தாவே; உண்மையிலே கர்த்தாவே, நீர் அருகில் உள்ளபோது சோதனைகள் தங்கள் வல்லமையை இழந்துவிடுகின்றன ஆ, எனக்கு நீர் தேவை, ஓ, எனக்கு நீர் தேவை! (நீர் தாயாரை எங்களிடமிருந்து எடுத்துக் கொண்டு விட்டால், அவர்களுடைய விலையேறப் பெற்ற ஆத்துமாவுக்கு பரலோகத்தில் இளைப்பாறுதல் அருளுவீராக. இதை அருளும், இதை அருளும், கர்த்தாவே). 92பிதாவே, தேவனே, எங்களுக்குச் செவி கொடும். இங்கு எல்லா நீதியையும் நிறைவேற்றுவது எங்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. வார்த்தை என்ன உரைக்கிறதென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் அந்தகாரத்தில் இல்லை. வார்த்தை என்ன வாக்குத்தத்தம் செய்துள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஓ, கர்த்தாவே, எல்லா நீதியையும் நிறைவேற்ற எங்களுக்குதவி செய்யும். உமது வார்த்தையை நிறைவேற்றும். நாங்கள் வியாதியஸ்தரிடம் வரும் போது, இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியும் இப்பொழுது விசுவாசத்தை உடையராய் இருப்பாராக. கர்த்தாவே, எங்கள் எல்லோருக்கும் உயிர்வாழப் பிரியம்; ஆனால் வரப்போகும் உலகத்துக்காக நித்திய ஜீவனுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பிதாவே, சபையோர் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, முக்கியமாக வியாதியஸ்தரும் அவதியுறுவோரும் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். 93இதற்கு முன்பு இக்கூடாரத்துக்கு வந்திராத அந்நியர்கள் யாராகிலும் இருக்கிறார்களா என்று வியக்கிறேன். நீங்கள் வியாதிப்பட்டு தேவனுடைய உதவிக்காக நோக்கிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் எல்லாரும் தலைவணங்கியிருக்கையில், எனக்கு அந்நியராயிருந்து என்னை அறியாதவர்கள் அல்லது உங்களை எனக்குத் தெரியாதவர்கள், நீங்கள் கிறிஸ்துவினிடம் உதவிக்கு வந்திருந்தால், அப்படிப்பட்டவர்கள் உங்கள் கைகளையுயர்த்துங்கள். பாருங்கள்? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும், உன்னையும். அநேகர் உள்ளனர். நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். இந்த செய்தி விருதாவாய்ப் போகாது. இது தேவனுடைய வார்த்தை. 94அந்த அம்மணி... தலைவணங்கியுள்ள அம்மணி, கைகளை உயர்த்தி பிடித்துள்ளவள். அவள் இருதய வியாதியினால் அவதியுறுகிறாள். அவளுடைய பெயர் திருமதி. நான்ஸ். அவள் கென்டக்கியிலுள்ள மாடிஸன்வில்லைச் சேர்ந்தவள். அது உண்மை. இல்லையா, அம்மணி? உன் கையை இப்பொழுது உயர்த்தலாம். உன் கையையுயர்த்தி வைத்திருந்தாய், அதை உயர்த்தியவாறே வைத்திருக்கலாம். நான் கூறியது உண்மை, அல்லவா? அப்படியானால் உன் கையையுயர்த்து. நண்பர்களே, நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பார்த்தீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). அந்த அம்மணியை எனக்குத் தெரியாது. அவளை நான் கண்டதில்லை. அது என்ன? அது சுவிசேஷத்தின் அடையாளம். நீங்கள் விசுவாசிக்கத் தக்கதாக... நான் அவருடைய தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கிறாயா, அம்மணி? நீ விசுவாசிக்கிறாய் அல்லவா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். உன்னை எனக்குத் தெரியாது. நான் கூறின பெயர் சரியல்லவா? அவர் உன்னிடம் கூறின அனைத்தும் சரியானால், உன் கையை சபையோரை நோக்கி ஆட்டு, அதன் மூலம் அது சரியென்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும். (சபையோர் களி கூருகின்றனர் - ஆசி) 95அதை செய்தது யார்? நசரேயனாகிய இயேசு. நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்றும், உங்களிடம் உண்மையைக் கூறுகிறேன் என்று நீங்கள் அறிந்து கொள்வதற்கென, இப்படிச் செய்வது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், அவர் திரும்பிப் பார்த்து அவளிடம் அவளுடைய இரத்தப்போக்கைக் குறித்துக் கூறி, அது நின்றுவிடும் என்றார். உனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அம்மணிக்கும் இருதய வியாதி உள்ளது. அது உண்மை. ஆம். அவளை எனக்குத் தெரியாது. எனக்கு உன்னைத் தெரியாதென்று உனக்குத் தெரியும். பாருங்கள்? ஆனால் தேவன் அவளை அறிந்திருக்கிறார். அவளுடைய கோளாறு என்னவென்பதை அவர் அறிந்திருக்கிறார், இல்லையா? செல்வி ஆலன், தேவன் உன்னை குணமாக்குவாரென்று விசுவாசிக்கிறாயா? (அந்த ஸ்திரீ ''ஆமென்“ என்கிறாள் - ஆசி). அதுதான் உன்னுடைய பெயரும், அதுவே உனக்குள்ள கோளாறுமானால் உன் கையையுயர்த்து, அது சரியென்றால் உன் கையையுயர்த்து (சபையோர் களி கூருகின்றனர் - ஆசி). 96உனக்குப் பக்கத்தில் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அம்மணி. நான் திருமதி பென்னெட்டைக் குறிப்பிடுகிறேன். நீங்கள் எல்லோரும் ஒரே இடத்திலிருந்து வருகிறீர்கள். அவளுக்கு இருதய வியாதிக்குப் பதிலாக சிறு நீரகக் கோளாறு உள்ளது. நீயும் சுகமடைவாய் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அம்மணியே, அப்படிச் செய்கிறாயா? உன் கையையுயர்த்தி, ''அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்“ என்று சொல். அப்படியானால் நீ சுகமடைந்தவளாய் வீடு செல்லலாம். நீ விசுவாசித்தால்! நீங்கள் எல்லோரும் கென்டக்கியிலுள்ள மாடிஸன்வில் என்னும் நகரத்தைச் சேர்ந்தவர்கள். பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் அம்மணி, திருமதி. போன். அவர் மாடிஸன்வில் அருகில் வசிக்கிறாள். அவள் மாடிஸன்வில்லில் வசிக்கவில்லை. அவள் என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறாள். அந்த தூதன் சரியாக அவள் மேல் நின்று கொண்டிருக்கிறார். அவள் மாடிஸன்வில் அருகில் வசிக்கிறாள். அவள் பெயர் போன். மண்டை சளி, ஆஸ்துமா, இருமல். அது சரியென்றால் உன் கையை முன்னும் பின்னும் ஆட்டு, அம்மணி. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, சுகமடைந்து வீடு செல்வாயாக. 97தொண்டை கோளாறு, ஐயா. தேவன் உங்கள் தொண்டை கோளாறை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் குணமடையுங்கள்! தேவனிடத்தில் விசுவாசமுள்ளவராயிருங்கள். செல்வி. ஹாப்கின்ஸ், சிக்காகோவிலிருந்து வந்துள்ள கறுப்பு நிற அம்மணி. உன்னை எனக்குத் தெரியாது. உன்னை என் வாழ் நாளில் நான் கண்டதில்லை. நீ மண்டை சளியிலிருந்தும் நரம்புத் தளர்ச்சியிலிருந்தும் குணமடைய விரும்புகிறாய். போய், விசுவாசி, நீ குணமடைவாய். ஓஹையோவிலுள்ள கொலம்பஸிலிருந்து வந்துள்ள திருமதி. ஹேன்ஸ், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் சுகமடைந்து வீடு செல்லலாம். நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. இந்தக் காரியங்கள் நடக்கும் என்று அவர் வாக்களித்துள்ளார். நாம் இங்கு அடைந்துள்ளோம். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (“ஆமென்”) 98நல்லது, ஒருவர் மேல் ஒருவர் கைகளை வையுங்கள். உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்தக் காரியங்கள் கடைசி நாட்களில் நடக்கும் என்று அவர் வாக்களித்துள்ளாரா? அப்படியானால், “ஆமென்” என்று சொல்லுங்கள். (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). “லோத்தின் நாட்களில் நடந்தது போல். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளாரா? (“ஆமென்”). விசுவாசி என்னும் முறையில், உங்கள் நிலையில் நீங்கள் உறுதியாய் நிற்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? (“ஆமென்”). இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. இந்த உறுமால்கள் உங்களைத் தொடும்போது (இயேசுவின் நாமத்தில் என் கைகளை இவைகளின் மேல் வைக்கிறேன்) அது தேவனுடைய நீதியாயிருக்கிறது. பவுலுடன் இருந்த அதே பரிசுத்த ஆவி இங்கே இருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். “அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து...'' நீங்கள் மாத்திரம் விசுவாசிப்பீர்களானால் சுகமடைவீர்கள். 99அதே பரிசுத்த ஆவி, இன்று காலை இங்கு இருந்து, கடைசி காலச் செய்தியாகிய தம்மை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். மகத்தான பரிசுத்த ஆவி தாமே தம்மை ஒரு நபராக்கிக் கொண்டு, மாம்ச சரீரத்தில் வந்து, தமது கிரியைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இன்று காலை நான் கடினமான ஒரு சூழ்நிலையில் நின்று கொண்டிருந்தேன். இங்கிருந்து நான் செல்லும்போது, நான் என்ன கேள்விப்படப் போகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் எல்லா நீதியும் நிறைவேற்றப்படுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. தேவன் இந்த செய்தியை என் இருதயத்தில் வைத்தார். விசுவாசி என்னும் முறையில், நீங்கள் விசுவாசிப்பது உங்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. உங்கள் கைகளை ஒருவர் மேல் ஒருவர் நீங்கள் வைத்திருக்கும்போது, வியாதிப்பட்டவர் ஒருவராவது நமது மத்தியில் இருக்க மாட்டார்கள், நீங்கள் மாத்திரம் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, உங்கள் நிலையில் உறுதியாய் நிற்க ஆயத்தமாயிருந்தால். 100இப்பொழுதும், பரலோகப் பிதாவே, செய்திக்குப் பிறகு இந்தக் கூட்டத்தாரை உம்மிடம் கொண்டு வருகிறோம். தேவனாகிய கர்த்தாவே, இது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்பதை இப்பொழுது ஜனங்களால் நிச்சயம் காணமுடியும். வார்த்தையில் நிற்பது ஒரு தீர்க்கதரிசிக்கு ஏற்றதாயிருக்கிறது. சபையின் அங்கத்தினருக்கு, அவர்கள் நிற்பது அவர்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும், வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவர்கள்“ என்னும் இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தையை விசுவாசிப்பது வியாதியஸ்தருக்கு ஏற்றதாயிருக்கிறது. கர்த்தாவே, ஒரு ஜெப வரிசையை நான் அழைக்க வேண்டுமென்றிருந்தேன். ஆனால் தொலைபேசியின் மூலம் எனக்கு கிடைக்கப் பெற்ற செய்தி என்னைக் கலங்கடித்தது. பிதாவே, ஓ, தேவனே, “எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது'' என்று உம்முடைய வசனம் உரைக்கிறது. அதை ஒவ்வொருவருக்கும் தருவீராக. 101அவர் எங்கள் மத்தியில் இருக்கிறார் என்று பரிசுத்த ஆவி இங்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தேவனுடைய வல்லமை, பரிசுத்த ஆவியின் சாட்சி இப்பொழுது இந்த மக்களின் இருதயங்களில் பிரவேசித்து அவர்களுக்கு ஒரு உறுதியை அளிப்பதாக; தானியேல் பெற்றிருந்தது போல. நோவா பெற்றிருந்தது போல், ஏனோக்கு பெற்றிருந்தது போல், யோவான் பெற்றிருந்தது போல, பேதுரு பெற்றிருந்தது போல், பவுல் பெற்றிருந்தது போல, இயேசு பெற்றிருந்தது போல், ஆபிரகாம் பெற்றிருந்தது போல், அவர்கள் எல்லோரும் பெற்றிருந்தது போல, கர்த்தாவே, இந்நாளில் தெய்வீக சுகமளித்தலின் வல்லமை ஊற்றப்பட்டு, அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டு, ஜனங்களின் மத்தியில், ஒரு விழிப்புணர்வு உண்டாகி, பரிசுத்த ஆவி ஜனங்களின் மத்தியில் விழுந்திருக்கும் போது, அது எங்களுக்கும் இந்நாளில் ஏற்றதாயிருக்கிறது. அவர்கள் கூச்சலிட்டு, அந்நிய பாஷை பேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, பெரிய வரங்களும், அடையாளங்களும், அற்புதங்களும், காணப்படுகின்றன. செய்தியின் தூதன், இக்காலத்தின் தூதன் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் எங்களுக்கு பிரத்தியட்சமாகி, எங்களுக்கு ஒரு செய்தியை அளித்துக் கொண்டிருக்கிறார். அது நிறைவேறி வருகிறதை நாங்கள் காண்கிறோம். அவர் எங்கள் சரீரங்களை எடுத்து, அழிவுக்குட்பட்ட மானிடர் என்னும் நிலையிலிருந்து தேவனுடைய பிரதிநிதிகளாக எங்களை மாற்றி அமைத்து, அந்த மகத்தான அடையாளங்களையும், அற்புதங்களையும், நாங்கள் உரைக்கும்படி அவர் செய்வதைக் காண்கிறோம். இவைகளை நாங்கள் காணும்போது, எல்லா நீதியையும் நிறைவேற்றுவது எங்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. 102ஆபிரகாம் லோத்தை நோக்கிப் பார்த்தான் என்றும், தானியேல் ஆபிரகாமை நோக்கிப் பார்த்தான் என்றும், யோவான் தானியேலை நோக்கிப் பார்த்தான் என்றும் (ஓ, தேவனே!) பேதுருவும் யோவானும் இயேசுவை நோக்கிப் பார்த்தனர் என்றும் நாங்கள் காண்கிறோம். இவர்களை நாங்கள் நோக்கிப் பார்த்து இன்றைக்கு எங்கள் மத்தியில் அதே பலன்களை (results) நாங்கள் காணும் போது, எல்லா நீதியையும் நிறைவேற்றுவது எங்களுக்கு ஏற்றதாயிருக்கிறது. கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் வல்லமை இந்தக் கட்டிடத்தில் அலை அலையாகப் பாய்ந்து இங்கு வியாதிப்பட்டுள்ள ஊனமுற்றுள்ள ஒவ்வொருவரையும் சுகமாக்குவதாக, உமது ஊழியக்காரன் என்னும் நிலையில் நான் பிசாசுக்கு கட்டளையிடுகிறேன். அவன் இன்று காலை என்னைத் தள்ளி, பிரசங்க பீடத்திலிருந்து என்னை அகற்ற முயன்றான். தேவனுடைய கிருபையினாலே நான் இங்கு தங்கியிருந்தேன். 103இந்த ஏழை, வியாதியஸ்தர், அவதியுறும் தேவனுடைய மானிடர் அனைவரும். சாத்தானே, பிசாசே, அவர்களை விட்டு வெளியே வா. இவர்களை விட்டுப் போய் அவர்களை இனிமேல் தொல்லைப்படுத்தாதே என்று ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்கு கட்டளையிடுகிறேன். இவர்கள் எபிரெய பிள்ளைகளைப் போல் சோதனையின் நேரத்தில் உறுதியாய் நின்று, இந்த நேரம் முதற்கொண்டு சுகமடைய தங்கள் நிலையில் உறுதியாய் நிற்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, வியாதியையும், இந்த சபையோரில் வியாதியை உண்டாக்கும் பிசாசுகளையும், இவர்களை விட்டு வெளியே வரும்படிக்கு கட்டளையிடுகிறேன். 104நாம் தலை வணங்கியிருக்கையில், நம்முடைய இருதயங்களை தேவனுக்கு முன்பாக வணங்குவோம். இப்பொழுது நான் ஒரு பாடலைப் பாடப் போகிறேன். உங்கள் உதவியினாலும் தேவனுடைய உதவியினாலும் நான் முயற்சி செய்யப் போகிறேன். என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது. நீங்கள் சிறிதளவும் சந்தேகப்பட வேண்டாம். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. இங்கு எத்தனை கிறிஸ்தவர்கள் உள்ளனர்? உங்கள் கைகளையுயர்த்தி, “ஆமென்” என்று சொல்லுங்கள். (சபையோர் “ஆமென்” என்கின்றனர் - ஆசி). எத்தனை விசுவாசிகள் உள்ளனர்? ''ஆமென்“ என்று சொல்லுங்கள் (”ஆமென்“). எத்தனை பேர் உங்கள் கைகளை மற்றவர்கள் மேல் வைத்திருக்கிறீர்கள்? ''ஆமென்” என்று சொல்லுங்கள். (“ஆமென்”). அப்படியானால் எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. என் விசுவாசம் உம்மையே நோக்குகிறது கல்வாரியின் ஆட்டுக்குட்டியே தெய்வீக இரட்சகரே நான் ஜெபிக்கும் போது எனக்குச் செவிகொடும் என் பாவமனைத்தும் போக்கும் (பாவம் என்பது “அவிசுவாசம்”) ஓ, இந்நாள் முதல் நான் முழுவதும் உம்முடையவனாயிருப்பேனாக வாழ்க்கையின் இருள் சூழ்ந்த பாதையில் நான் நடந்து துயரம் என்னைச் சுற்றிலும் பரவும் போது, (தேவனே, இப்பொழுது என் வழிகாட்டியாயிரும்) என் வழிகாட்டியாயிரும் இருள் பகலாக மாறக் கட்டளையிடும் துயரத்தின் கண்ணீரைத் துடையும் உம்மை விட்டு நான் என்றென்றும் வழி விலகாதிருப்பேனாக. 105நாம் தலை வணங்கியிருக்கையில், நான் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, என் அன்பார்ந்த வயோதிப தாயார் கடந்து சென்றுவிட்டிருந்தால், என் சத்தம் பரலோகத்தின் பெரிய மலைக் கணவாய்கள் வழியாக எதிரொலிப்பதாக. அன்றொரு நாள் அவர்கள் என்னிடம், “பில்லி, நீ என்னைப் போஷித்து வந்தாய். என் வாடகையும் மின்சாரக் கட்டணத்தையும் செலுத்தி வந்தாய். உண்பதற்கு எனக்கு ஏதாகிலும் கொடுத்து வந்தாய் தேனே, நீ சிறுவனாயிருந்தபோது, நான் குளிரில் வெளியே சென்று, மரத்தை வெட்டிக் கொண்டு வந்து, தீ மூட்டி, உனக்கு வெப்பத்தை அளித்தேன். நமது வீட்டில் உள்ளதை வைத்து சமைத்துப் போட்டேன்'' என்றார்கள். அவர்கள் அங்கு கிடப்பதைப் பாருங்கள், எங்கள் அழுக்கு துணிகளைத் துவைத்த அந்த சிறு வயோதிப பலவீனமுள்ள கைகள். நீங்கள் உதவியற்றவர்களாய் நிற்கிறீர்கள், என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 106நான், “அம்மா, ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில், உங்களுடைய நீதியுள்ள ஆத்துமாவை சமர்ப்பிக்கிறேன்” என்றேன். அவர்கள் இப்பொழுது போய்விட்டிருக்கக் கூடும். அவர்கள் எல்லோருமே போய்விட்டார்கள். என் சகோதரர் மாத்திரமே இப்பொழுது உயிருடன் இருக்கிறார்கள். எனக்குப் பிரசங்கப் பீடத்தில் கிடைத்த செய்தி மோசமானது. அவர்கள் போய்விட்டிருந்தால், தேவன் அவர்களுடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருவாராக. அவர்கள் இன்னமும் நம்முடன் இருந்தால். இன்றிரவு வரைக்கும் அவர்கள் தேவனுடைய கிருபையினால் நம்முடன் இருந்தால், என் கடமையை நிறைவேற்ற நான் இங்கு பிரசங்க பீடத்தில் இருப்பேன். ஏனெனில் எல்லா நீதியையும் நிறைவேற்றுவது எனக்கு ஏற்றதாயிருக்கிறது. என்ன நடந்ததென்று பார்க்கிறேன். இப்பொழுது ஆராதனையை ஆசீர்வதிக்கப்பட்ட என் உடன் போதகர் சகோ. நெவிலினிடம் ஒப்படைக்கிறேன்.